AK64: ஆதிக் படத்துக்காக சம்பளத்தை குறைத்த அஜித்!.. எவ்வளவுன்னு சொன்னா சிரிக்கக் கூடாது!...
அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்திதான். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கவிருக்கிறார். குட் பேட் அக்லி ஹிட்டுக்கு பின் அஜித்தும், ஆதிக்கும் இந்த படத்தில் மீண்டும் இணையவிருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு அஜித் கேட்ட சம்பளம் 185 கோடி. ஆனால், அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்கமுடியாது என பல தயாரிப்பாளர்களும் கை விரித்துவிட்டனர். அஜித் 100 கோடி சம்பளம் வாங்கினால் இந்த படத்தை தயாரிக்க முன்வருகிறோம் என குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சொன்னது. ஆனால், அஜித் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஏனெனில், குட் பேட் அக்லி படம் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர அதிபர்களுக்கும் லாபம் என்றாலும் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 70 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள். எனவே, அதை காரணம் காட்டி தன் சம்பளத்தில் கை வைத்துவிடுவார்கள் என அஜித் கருதினார். துவக்கத்தில் இப்படத்தை தயாரிக்க ராகுலும் தயங்கினார். ஏனெனில், அஜித்தின் சம்பளத்தை சேர்த்தால் படத்தின் பட்ஜெட் 300 கோடி. ஆனாலும், தற்போது இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பது உறுதியாகிவிட்டது.

துவக்கத்தில் சம்பளத்திற்கு பதிலாக இப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளை அஜித் கேட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அஜித் மனசு இறங்கி தனது சம்பளத்தை குறைத்துவிட்டாராம். அதாவது 185 கோடியிலிருந்து 183 கோடியாக குறைத்திருக்கிறாராம். அஜித்துக்கு சம்பளத்தில் ஒரு செண்டிமெண்ட் உண்டு. சம்பளத்தின் கூட்டுத்தொகை 5 வரவேண்டும். அதனால்தான் 185 கோடி கேட்டார். ஆனாலும், தற்போது அதிலிருந்து 2 கோடியை குறைத்திருக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. மேலும், படத்தின் ஷூட்டிங் நவம்பர் முதல் வாரம் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
