செம ஸ்டைலா இருக்காரே தல!.. அஜித் எடுத்த செல்பி போட்டோ செம வைரல்!..

by Murugan |
செம ஸ்டைலா இருக்காரே தல!.. அஜித் எடுத்த செல்பி போட்டோ செம வைரல்!..
X

Good bad ugly: நடிகர் அஜித் எந்த திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்வது இல்லை. அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிக்கும் போக மாட்டார். அவரின் ரசிகர்களை சந்திக்க மாட்டார். பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டார். ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.

செய்தியாளர்களையும் சந்திக்கமாட்டார். அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகாது. அவர் நடிப்பில் வலிமை படம் துவங்கியபோது ஒரு வருடத்திற்கும் மேல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பொறுமையிழந்த அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் வலிமை அப்டேட் கேட்டனர்.

தான் நடிக்கும் படங்கள் இழுத்துக்கொண்டே போவதால் ரசிகர்கள் பொறுமையிழந்து போகிறார்கள் என்பதை புரிந்துகொண்ட அஜித் அவ்வப்போது தனது புகைப்படங்களை மட்டும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து அஜித் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

அஜித் இப்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெனிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம், விடாமுயற்சி படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டுமே எடுக்க வேண்டியிருக்கிறது. குட் பேட் அக்லி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.


கடந்த சில நாட்களாகவே அஜித் தொடர்பான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுரேஷ் சந்திராவே பகிர்ந்திருந்தார். அதன்பின் ஷாலினி தனது கணவர் அஜித்துடன் எடுத்த செல்பி வீடியோ வெளியிட்டார்.


இந்நிலையில்தான், ஸ்டைலான லுக்கில் தன்னை தானே எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Next Story