ஆல் ஏரியாலயும் ஐயா கிங்குடா!.. புதிய சாதனை படைத்த புஷ்பா 2.. வாயைப்பிளக்கும் பாலிவுட்!..

by Ramya |
pushpa 2
X

pushpa 2 

புஷ்பா 2 திரைப்படம்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் பேன் இந்தியா அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற காரணத்தால் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு தயாரானார்கள்.


அதன்படி கடந்த இரண்டு வருடங்களாக இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கபோடு போட்டு வருகின்றது. தெலுங்கு மொழி படமாக உருவாகி இருந்தாலும் மற்ற மொழிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றது.

படத்தின் வசூல்:

புஷ்பா 2 திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் 600 கோடி பட்ஜெட்டில் எடுத்ததாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டது. படம் ரிலீசுக்கு பிறகு முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்கள்.

படத்திற்கு கிடைத்த மிகுந்த வரவேற்பு காரணத்தால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. படம் இரண்டாவது நாளில் 449 கோடியும், மூன்றாவது நாளில் 621 கோடியும், நான்காவது நாளில் 829 கோடியும், ஐந்தாவது நாளில் 922 கோடியும், ஆறாவது நாளில் 1002 கோடியும் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினராக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். மேலும் ஏழாவது நாளில் படம் 1055 கோடியும் வசூல் செய்துள்ளது.

எட்டாவது நாளில் இந்த திரைப்படம் 1067 வசூல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர். தொடர்ந்து படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில் பத்தாவது நாளில் 1196 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது

ஹிந்தியில் சாதனை:

படம் வெளியான நாள் முதலே தெலுங்கு, தமிழ் மொழியை தாண்டி ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து ஹிந்தி மொழியில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை அதிகளவு கொடுத்து வருகிறார்கள். இதனால் புஷ்பா 2 திரைப்படம் ஹிந்தியில் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது.




அந்த வகையில் 10 நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் இந்தியில் 507 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. இந்தியில் வேகமாக 500 கோடியை கடந்த முதல் திரைப்படம் என்கின்ற பெருமையை புஷ்பா 2 திரைப்படம் பெற்றிருக்கின்றது. இந்த தகவலை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Next Story