பைத்தியக்காரத்தனமா? அத விட கொடுமை.. மணிரத்னத்தின் படங்களை எல்லாம் மிஸ் பண்ண நடிகர்

manirathnam
திருடா திருடா படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. குறிப்பாக அந்தப் படத்தில் அமைந்த கொஞ்சம் நிலவு பாடல் ஒரு பெரிய டிரெண்ட் செட்டரையே சினிமாவில் உருவாக்கியது. ஏஆர் ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் படம் இன்று வரை ஒரு மைல் கல்லாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஆனந்த் மற்றும் பிரசாந்த் லீடு ரோலில் நடித்திருந்தார்கள்.
நடிகை ஹீரா கதாநாயகியாக நடித்திருப்பார். இதில் ஆனந்த் தனக்கு சினிமாவில் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். வண்ணக்கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ஆனந்த். 1987 ஆம் ஆண்டு வெளியானது. கமல் மாதிரி வந்துவிட வேண்டும் என்ற ஆசையில்தான் இவரும் சினிமாவில் நுழைந்திருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் வில்லனாக தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் ஆனந்த்.
வண்ணக்கனவுகள் படத்தில் நடிக்கும் போது அவருக்கு 18 வயதுதானாம். சினிமாவில் யாருமே சரியான அறிவுரைகளை வழங்காததால்தான் பல நல்ல பட வாய்ப்புகளை இழந்தேன் என ஆனந்த் கூறினார். அதில் குறிப்பாக மௌன ராகம் படத்தில் இவர்தான் நடிக்க வேண்டியதாம். ஆனால் மணிரத்னம் ‘ நீ பார்ப்பதற்கு சின்னப் பையனாக இருக்கிற’ என சொல்லி வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
அதை போல் ரோஜா படத்திலும் இவர்தான் நடிக்க வேண்டியது. அரவிந்த்சாமிதான் ஹீரோவாக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் அரவிந்த்சாமியின் பெற்றோருக்கு ஏதோ பிரச்சினை என சொல்லி நடிக்க மாட்டேனு போய்விட்டாராம். அதன் பிறகு ஆனந்தை வைத்து சில காட்சிகளை எடுத்திருக்கிறார் மணிரத்னம். அப்பொழுதும் மணிரத்னத்திற்கு செட்டாகவில்லையாம். அதனால் நீ வேண்டாம். இன்னொரு படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
அதை போல தளபதி படத்திலும் அரவிந்த்சாமி கேரக்டர் ஆனந்த் தாம் பண்ண வேண்டியதாம். அக்னி நட்சத்திரம் படத்திலும் இவர்தான் நடிக்க வேண்டியதாம். இப்படி பல படங்கள் மிஸ் ஆக மணிரத்னமே அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்திக்கின் நண்பர் கேரக்டரில் நடிக்க வைத்தாராம். அதுவும் ஆனந்திற்கு செட்டாகவில்லையாம். அதை போல பாலச்சந்தரின் படமான டூயட் படத்தில் ரமேஷ் அரவிந்த் கேரக்டர் இவர்தான் பண்ண வேண்டியதாம்.

anand
பாலச்சந்தரே அழைத்து ஆனந்தை கட்டியணைத்து நீதான்பா என் படத்துல ஹீரோனு சொல்லி கமிட் செய்திருக்கிறார். ‘ஆனால் நான் பண்ண பைத்தியக்காரத்தனம். கேட்கக்கூடாதவங்க பேச்சைஎல்லாம் கேட்டு சம்பள விஷயத்தில் பெரிய தப்பு பண்ணி அந்த படமும் மிஸ் ஆகி விட்டது’ என ஆனந்த் கூறினார். ஆனால் ஒரு மனுஷனுக்கு வலிங்கிறது சில நாள்களில் மறைந்துவிடும். ஆனால் இவருக்கு வாழ் நாள் முழுக்க இருக்கிற வலியாகிவிட்டது.