பகல் முழுக்க பாட்டு!.. நைட் ஃபுல்லா ஃபைட்டு!.. 4 நாட்கள் தூங்காமல் ரஜினி நடித்த திரைப்படம்!..

by Murugan |   ( Updated:2024-10-20 09:30:15  )
rajini
X

rajini

Rajinikanth: பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் படத்தில் துவங்கிய பயணம் 50 வருடங்களை தொட்டுவிட்டது. துவக்கத்தில் கமல் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அவரின் நண்பராக நடிப்பார். பெரும்பாலும், ரஜினியே அப்படங்களில் வில்லனாகவும் இருப்பார்.

அதன்பின் கமலும், ரஜினியும் இருவரும் பேசி தனியாக பிரிந்து நடிப்போம் என முடிவெடுத்தனர். பைரவி படம் மூலம் ஹீரோவாக மாறினார் ரஜினி. ரஜினி நடிப்பில் உருவான படங்கள் நல்ல வசூலை பெறவே அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.

ரஜினியை அறிமுகம் செய்தது பாலச்சந்தர் என்றாலும் அவரை ஒரு ஸ்டாராக மாற்றியது கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்தான். இதை பாலச்சந்தரே சொல்லி இருக்கிறார். ஜனரஞ்சகமான கதைகளில் ரஜினியை நடிக்க வைத்து சூப்பர்ஸ்டாராக மாற்றியவர் அவர்தான். அதேபோல், ரஜினியின் வளர்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கும் பங்கு உண்டு.


சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை ரஜினி பிடித்ததற்கும், அதை பல வருடங்களாக தக்க வைப்பதற்கும் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது. அதனால்தான் 73 வயதிலும் அவரால் ஜெயிலர் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடிகிறது. ரஜினியிடம் எப்போதும் ஒரு எனர்ஜி இருக்கும். அது அசாத்தியமானது.

இதை திரையுலகில் பலரும் வியந்து பேசியிருக்கிறார்கள். இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான எல்.ராஜா சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘அவர் நடித்த தர்மதுரை படத்தில் நான் வேலை செய்தேன். பகல் முழுவதும் வாஹினி ஸ்டுடியோவில் பாடல் காட்சிகளில் நடிப்பார். இரவில் வேறு ஒரு இடத்தில் சண்டை காட்சிகளில் நடிப்பார்.

மேக்கப் அறையில் தூங்கி, அங்கேயே குளித்து ரெடியாகி விடுவார். இப்படி தொடர்ந்து 4 நாட்கள் இரவும், பகலும் நடித்தார். நாங்கள் எல்லாம் டயர்ட் ஆகிவிடுவோம். ஆனால், அவர் பிரெஸ்ஸாகவே இருப்பார். ரஜினி சாரிடம் இருக்கும் எனர்ஜி யாரிடமும் நான் பார்த்தது இல்லை. அதுதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது’ என பேசியிருக்கிறார்.

Next Story