மூக்குத்தி அம்மன் 2-வில் வில்லனாக அந்த நடிகர்!.. ஆனா வெச்சாரே ஒரு பெரிய செக்!...

by Murugan |   ( Updated:2025-02-27 15:00:33  )
mookuithi amman
X

Mookuthi Amman 2: தமிழ் சினிமாவில் 25 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர்.சி. மினிமம் பட்ஜெட்டில், மிகவும் குறைவான நாட்களில் படத்தை எடுத்து ஹிட் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை பெற்றுத்தரும் வெகு சில இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர். இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக இப்போதும் இருக்கிறது.

கார்த்திக், கவுண்டமணி, சரத்குமார், ரஜினி, கமல், அஜித், விஷால் என பலரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார். ஆனால், விஜயை மட்டும் வைத்து இவர் படம் இயக்கவில்லை. சுந்தர் சி பலமுறை முயன்றும் விஜய்க்கும், அவருக்கும் செட் ஆகவில்லை. ஆக்சன் பட கதையே விஜய் நடிக்க வேண்டிய படம்தான். அவர் நடிக்காததால் விஷால் நடித்தார்.


காமெடி கலந்த காதல் படங்களை இயக்கிவந்த சுந்தர் சி. ராகவா லாரன்ஸை போல ஹாரர் காமெடி ரூட்டுக்கு மாறி அரண்மனை படத்தை எடுத்தர். இந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என எடுத்து ஹிட் கொடுத்தார். அடுத்து அரண்மனை 5 எடுக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.

இதற்கிடையில் 12 வருடங்களுக்கு முன்பு விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்ட பலரையும் வைத்து அவர் இயக்கிய மதகஜராஜா திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஒருபக்கம், கேங்கர்ஸ் படத்தில் வடிவேலுவுடன் நடித்து வருகிறார்.


ஒருபக்கம் மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் அடுத்து எடுக்கவுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடிக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்திலும் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2-வில் அருண் விஜயை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்பதால் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள். ஹீரோவாக நடித்து வரும் அருண் விஜய் நயன்தாராவிடம் தோற்றுப்போகும் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் சம்பளத்தை சேர்த்து கேட்கத்தான் செய்வார். விரைவில் பேச்சுவார்த்தை முடிந்து இதில் அருண்விஜய் நடிக்கிறாரா என்பது தெரிந்துவிடும். மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது.

Next Story