ஃபயர் படத்துக்கு இந்த பில்டப் ஓவர்… பிக்பாஸ் பாலாவை மீண்டும் கலாய்க்கும் ரசிகர்கள்..

Bala: பிக்பாஸ் பாலா நடிப்பில் உருவாகி இருக்கும் ஃபயர் படத்தின் ரிலீஸுக்கு பின்னர், ரசிகர்கள் அவரை மேலும் கலாய்த்து வருவதை பார்க்க முடிகிறது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் கலந்து கொண்டவர் நடிகர் பாலா. ஆரம்பித்த சில நாட்களிலே பாலாவை ரசிகர்கள் ஆண்ட்டி ஹீரோவாகவே பார்க்க தொடங்கினர். அவருக்கு எதிராக ஹீரோவாக உருவெடுத்தார் நடிகர் ஆரி. இருவருக்குமே அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் குவிந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் இரண்டாவதாக தான் நடிகர் பாலாவால் வர முடிந்தது. இருந்தும் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். ஆனால் அதில் மிகப்பெரிய ட்விஸ்ட் கொண்டு காத்திருந்தது.
போட்டியாளர்கள் அனிதா மற்றும் நிரூப்பால் ஹீரோ ஆகினார் நடிகர் பாலா. இதனால் அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் மாறினார். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய கவனத்தை திரைப்படங்களில் திரும்பினார். அந்த வகையில் அவருக்கு கிடைத்த திரைப்படம் ஃபயர்.
நாகர்கோவில் சேர்ந்த காசி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் பாலாவுடன், சாக்ஷி, சாந்தினி மற்றும் ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் எல்லோருமே ஓவர் கிளாமராக நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
அதிலும் சின்னத்திரைகள் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த ரச்சிதா எல்லை மீறி காட்டிய கவர்ச்சியில் ரசிகர்களை இவரா இப்படி என்னும் நிலைக்கு தள்ளியது. இந்நிலையில் இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு சுமாரான விமர்சனம் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் திரையரங்கு காட்சியில் கலந்து கொண்ட நடிகர் பாலா தன்னுடைய ரசிகர்களுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு என்னுடைய 10 ஆண்டு கடின உழைப்பு இது. நடிப்பில் இருந்து மாடலாகி, பிக் பாஸ் என்று மீண்டும் இதே இடத்திற்கு திரும்பி இருக்கிறேன்.
விஜய் டிவியின் சிஇஓ பிரதீப் மில்ராய் பீட்டர், ஃபயர் படத்தின் டைரக்டர் சதீஷ் மற்றும் என் ரசிகர்கள் மட்டுமே இதற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஃபயர் படத்துக்கு நீங்க கொடுக்கும் பில்டப் கொஞ்சம் ஓவர்தான் என ரசிகர்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.