சோ எடுத்த விபரீத முடிவால் தடுமாறிய நாடக மேடை! அதிலிருந்து அவர் கற்றுக் கொண்ட பாடம்

by rohini |
cho
X

cho

தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்பட்டவர் நடிகர் சோ. நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த எழுத்தாளராக அதைவிட ஒரு ஆற்றமிக்க பத்திரிக்கையாளராகவும் இருந்தார் சோ. செல்வி ஜெயலலிதாவிற்கு நெருக்கமான ஒரு நண்பராகவும் இருந்து வந்தார் சோ. ஏகப்பட்ட நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். இவருடைய நாடகத்தில் மிகவும் பிரபலமானது துக்ளக் என்ற நாடகம்தான்.

இந்த நிலையில் நாடக மேடையில் சோ எடுத்த ஒரு விபரீதமான முடிவு எங்கு கொண்டு போய் நிறுத்தியது என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார். சித்ரா லட்சுமணன் கூறியது பின்வருமாறு:

சோ எப்படிப்பட்ட கலைஞர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வித்தியாசமாக எதையும் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்தான் சோ. பொதுவாக அந்த காலத்தில் நாடகம் போட்டார்கள் என்றால் அந்த நாடகத்தின் எல்லா கதாபாத்திரங்களின் வசனங்களும் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். யாராவது வரவில்லை என்றால் அடுத்த ஆளு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போய்விடுவார்கள்.

அந்தளவுக்கு தன்னை தயார்படுத்தியிருப்பார்கள். ஒருமுறை சோவுக்கு வித்தியாசமான எண்ணம் பிறந்தது. இந்த நாடகத்தில் என்னென்ன கதாபாத்திரம் இருக்கிறதோ அதையெல்லாம் ஒரு சீட்டில் எழுதி குலுக்கிப் போடுவோம். ஆளாளுக்கு ஒரு பேப்பரை எடுங்க. யாருக்கு என்ன கதாபாத்திரம் வருதோ அதைதான் இன்று நடிக்கவேண்டும் என கூறினாராம்.

அதைக் கேட்ட அனைவருக்கும் குபீர்னு வியர்த்துவிட்டது. சோ இதெல்லாம் வேண்டாம். இது ஒரு விபரீதமான முயற்சி. நாடகத்தை பார்க்க வருகிறவர்கள் எல்லாம் குழம்பிப் போய்விடுவார்கள் என்று சோவின் நண்பர்கள் பல முறை சொல்லிப் பார்த்தார்கள். சோவை பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய பிடிவாதக்காரர்.

அதனால் அவர் நண்பர்கள் சொன்னதை கேட்கவில்லை.இன்றைக்கு ஒரு நாள் பண்ணிப் பார்ப்போமே என்று அன்று எல்லாரையும் அப்படியே நடிக்கவைத்தார் சோ. நாடகத்தை பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய விபரீதம் எதுவும் நடக்கவில்லை என்றாலும் தட்டுத்தடுமாறித்தான் அந்த வசனங்களை எல்லாம் பேசி நடித்து முடித்தார்கள்.

இனிமேல் இந்த மாதிரியான விஷப்பரீட்சைகளை எல்லாம் எடுக்கவே கூடாது என சோ முடிவெடுத்தார் என்றால் அன்றைக்கும் அந்த நாடகம் அவருக்குக் கற்றுக் கொடுத்த பாடம் தான் என்று சொல்லவேண்டும்.

Next Story