தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது பார்சல்!.. குபேரா படத்தில் ஃபைனல் அவுட்புட் ரிசல்ட்!...

by MURUGAN |
kubera
X

Kuberaa: துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு என அண்ணன் செல்வராகவனிடம் சினிமா கற்றுக்கொண்டவர் இவர். செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷு நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகராக மாறியதோடு 2 தேசிய விருதுகளையும் வாங்கினார்.

அதோடு, பேன் இண்டியா நடிகராகவும் மாறி ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உள்ள சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தார். ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்தார். ஒய் திஸ் கொலை வெறி பாடல் உலகமெங்கும் பிரபலமானதால் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் தனுஷுக்கு கிடைத்தது.


மாரி படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப்பில் பல கோடிகள் பார்த்தனர். இதுவரை அந்த சாதனையை எந்த வீடியோவும் முறியடிக்கவில்லை. பவர் பாண்டி படம் மூலம் இயக்குனராக மாறிய தனுஷ் ராயன் என்கிற படத்தையும் இயக்கினார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

அதன்பின் இட்லிக்கடை என்கிற படத்தையும் இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. தெலுங்கு சினிமா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்கிற படத்திலும் தனுஷ் நடித்திருக்கிறார். சமூகம் சார்ந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வருகிற ஜூன் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபைனல் அவுட்புட்டை சமீபத்தில் படக்குழு பார்த்திருக்கிறது. படம் பார்த்தவர்கள் தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என சொல்லி வருகிறார்களாம்.

Next Story