விஜய் சார் எனக்கு போட்டியா?!.. அதுல ஒரு யூசும் இல்ல!.. தனுஷ் சொல்றத கேளுங்க!..
Actor vijay: அப்பா மூலம் சினிமாவுக்கு வந்தவர்கள்தான் விஜயும், தனுஷும். விஜய் அப்பா எஸ்.ஏ.சி இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் அறிமுகமானார். தனுஷ் தனது அப்பா கஸ்துரிராஜா மூலம் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். தனது அண்ணன் செல்வராகவன் மூலம் நடிப்பு பயிற்சி எடுத்தார் தனுஷ்.
விஜயோ அப்பவின் இயக்கத்தில் ஒரே மாதிரி படங்களில் நடித்து வந்தார். பெரும்பாலும் சங்கவி, சுவாதி போன்ற நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்தார். விஜய்க்கு சூப்பர் ஹிட் படம் கிடைக்க சில வருடங்கள் ஆனது. விக்ரமன் இயக்கத்தில் உருவான பூவே உனக்காக படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது.
தனுஷோ முதல் 3 படங்களில் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர். அவரின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி ஆகிய 3 படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதோடு, கமல் போல நடிக்கிறார் என பலரும் பேசினார்கள். ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகள் ஒரு பக்கம் கமர்சியல் மசாலா படங்கள் என கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் தனுஷ்.
தனுஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஒரு முக்கிய நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர் விஜய். கில்லி படத்திலேயே தன்னை ஒரு வசூல் மன்னன் என் அவர் காட்டிவிட்டார். அப்போதே அவருக்கு ரசிகர்கள் அதிக அளவில் இருந்தனர். ஒரு திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு கொடுக்கப்பட ‘என்னை விட நன்றாக நடிக்கும் நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். தனுஷ் இருக்கிறார்’ என பெருந்தன்மையாக பேசினார் விஜய்.
தனுஷின் சிறந்த நடிப்பை ரசிக்கும் ஒரு ரசிகராக இருப்பவர்தான் விஜய். என் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது வேறு. என்னால் தனுஷு செய்வது போலவோ, விக்ரம் செய்வது போலவோ நடிக்க முடியாது என ஓப்பனாக சொன்னவர்தான் விஜய். விஜயின் உயரம் வேறு. தனுஷ் பிடித்திருக்கும் இடம் வேறு. அதேநேரம், விஜய்க்கு தனுஷ் போட்டி என சிலர் அவ்வப்போது சொல்வது உண்டு.
இந்நிலையில், இதுபற்றி ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ள தனுஷ் ‘விஜய் சார் எனக்கு போட்டி எல்லாம் கிடையாது. அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மற்றும் சகோதரர். அவரு எனக்கு போட்டின்னு சொல்றது எல்லாம் தேவை இல்லாத ஸ்டேட்மெண்ட். ரசிகர்கள் என்ஜாய் பன்றதுக்காகத்தான் படங்களை எடுக்கிறார்கள். இதுல 2 படம் போட்டி போடுவதில் யாருக்கும் எந்த லாபமும் இல்லை’ என சொல்லி இருக்கிறார்.