தனுஷையே பிரம்மிக்க வைத்த அந்த இயக்குனர்.. அடுத்த படம் கண்டிப்பா அவரோடதான்..!

by Ramya |
Tamilarasan Pachamuthu
X

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். அதிலும் ராயன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுக்கு நிற்க கூட நேரமில்லை என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் படங்களை இயக்கி வந்தாலும் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

ராயன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற ஒரு காதல் திரைப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கின்றார்.


இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் ஏப்ரல் 10ம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் மற்ற இயக்குனர் படங்களிலும் கமிட்டாகி இருக்கின்றார். அதிலும் பல இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி இருப்பதால் எந்த திரைப்படத்தில் நடிப்பார் என்கின்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கின்றது. காரணம் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறி வருகிறார்கள்.

அதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜையும் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து தற்போது புதிய ஒரு தகவலும் வெளியாகி இருக்கின்றது.

அதாவது கடந்த ஆண்டு லப்பர் பந்து என்கின்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறி வந்தார்கள். அதன் பிறகு படம் தொடர்பான எந்த அப்டேட் வெளியாகாததால் ஏற்படும் டிராப் ஆகிவிட்டது என்று கூறிவந்த நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.


சமீபத்தில் தான் இயக்குனர் தமிழரசன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியிருப்பதாகவும், அந்த கதையை கேட்டு நடிகர் தனுஷ் மிகவும் ஆச்சரியப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் தமிழரசனிடம் கதை மிகப்பிரமாதமாக இருக்கின்றது நிச்சியம் இந்த திரைப்படத்தை நாம் இணைந்து செய்வோம் படத்தின் கதையை தயார் செய்யுங்கள் என்று கூறினாராம்.

அதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரிடம் போன் செய்து இந்த இயக்குனர் மிகச் சிறப்பாக வருவார். படத்தின் கதை அவ்வளவு பிரமாதமாக இருக்கின்றது என்று பாராட்டி தள்ளி இருக்கின்றார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story