Connect with us
bison

Cinema News

என்னோட 2 படங்கள பர்க்கலனாலும் பரவால்ல.. பைசன் பாருங்க!… ஃபீல் பண்ணி பேசிய துருவ்!.

Bison: சியான் விக்ரமின் மகன் துருவ். தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படம் முடிந்தபின் இந்த படம் தங்களுக்கு திருப்தி இல்லை என கூறிய தயாரிப்பளர் மீண்டும் வேறு இயக்குனரை வைத்து அப்படத்தை எடுப்பதாக அறிவித்தார்.

அதன்பின் வேறு ஒருவர் இயக்கி ஆதித்ய வர்மா என்கிற பெயரில் படமாக எடுத்தனர். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பின் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளிவந்த மகான் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விக்ரமின் மகனாகவே துருவ் நடித்திருந்தார்.

இந்த படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தாலும் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது. இந்த படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் துருவின் அடுத்த படம் வெளியாகவில்லை. மகானுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற படத்தில் துருவ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இது தென் மாவட்டத்தை சேர்ந்த மணக்கத்தி கணேசன் என்கிற கபடி விளையட்டு வீரரின் வாழ்வில் நடந்த சொந்தக்கதை ஆகும். அதோடு, மாரி செல்வராஜ் தனது ஸ்டைலில் இந்த படத்தில் சாதி பிரச்சனையையும் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது. பைசன் திரைப்படம் வருகிற வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம் ‘நான் இதுவரை 2 படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பைசன் படத்தை பாருங்கள். இந்த படத்திற்காக எனது 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன். மாரி சார் பெரிய சம்பவமே செய்திருக்கிறார். நீங்கள் குடும்பம், காதலி, காதலனோடு பைசன் படத்தை பார்க்கலாம். கண்டிப்பாக இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும்’ என பேசியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top