தளபதி 69 படத்தில் அசுரன் பட நடிகர்!.. மமீதா பைஜூக்கு ஜோடியாகவா?.. சூப்பரா இருக்கே காம்போ!
Thalapathy 69: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த நடிகர் விஜய் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் தான் இவரின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுகின்றது.
சினிமாவில் டாப் நடிகராக இருக்கும்போதே சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கால் பதித்திருக்கின்றார் நடிகர் விஜய். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருந்த நடிகர் விஜய் இதனை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து அதன் பிறகு தனது கட்சியின் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையுமே மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருந்தார்.
என்னதான் சினிமாவில் நடித்து வந்தாலும் மற்றொருபுறம் அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார். அரசியல் கட்சி தொடங்கியது முதல் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வரும் நடிகர் விஜய் அதன் மூலம் விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றார். நடிகர் விஜய் எந்த ஒரு விஷயத்துக்கும் வெளியில் வராமல் வீட்டில் இருந்தபடியே குரல் கொடுத்து வருவது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி வருகின்றது.
நடிகர் விஜய் வொர்க் ப்ரம் அரசியல் செய்து வருகின்றார் என்று பலரும் அவரை கேலி கிண்டல் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து தனது கட்சி மற்றும் சினிமா வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றார். கடந்த ஆண்டு இறுதியில் தளபதி 69 திரைப்படத்தின் முதல் ஷெடியூலை வெற்றிகரமாக முடித்திருக்கும் நடிகர் விஜய் பொங்கல் பண்டிகைக்கு பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கின்றார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது .
அதாவது அசுரன் மற்றும் பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான டி ஜே அருணாச்சலம் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். அதாவது மமிதா பைஜூக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'தளபதி 69 திரைப்படத்தில் நானும் ஒரு பாகமாக இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விஜய் சாரின் கடைசி திரைப்படம், அதனால் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்வதற்கு எனக்கு மனசில்லை. சிறு வயதிலிருந்து அவரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராகவும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் நான் நடிப்பது ஒரு கனவு போல் இருக்கின்றது. படத்தில் அவருடன் சேர்ந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அவர் மீது இருக்கும் மரியாதை மேலும் அதிகரித்து இருக்கின்றது' என்று அந்த பேட்டியில் அவர் பேசியிருந்தார்.