பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பகத் பாசில்!.. ஜோடி யாருன்னு கேட்டா ஷாக்காயிடுவீங்க...

by Ramya |   ( Updated:2024-12-06 13:13:20  )
பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் பகத் பாசில்!.. ஜோடி யாருன்னு கேட்டா ஷாக்காயிடுவீங்க...
X

fahadh faasil

பகத் பாசில்:

மலையாள சினிமாவில் ஹீரோவாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் பகத் பாசில். 2001 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய கையேடும் தூரத்து என்கின்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய பகத்பாசில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானதை காட்டிலும் தற்போது வில்லனாக நடித்து அசத்தி வருகின்றார்.

பிறமொழி படங்கள்:

மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வருகின்றார் நடிகர் பகத் பாஸில். இவரை திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு இயக்குனர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். பெரிய பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கு கூட கால்ஷீட் இல்லாத அளவிற்கு மிக பிஸியாக இருந்து வருகின்றார்.


தமிழ் சினிமாவில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார். இவர் தமிழில் கடைசியாக வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு இருக்கின்றது. தற்போது புஷ்பா 2 திரைப்படத்திலும் போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். இவரை மலையாள சினிமாவின் நடிப்பு அரக்கன் என்று பலரும் கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நிற்கின்றார் நடிகர் பகத் பாசில். மலையாள சினிமாவில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆவேசம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

பாலிவுட் என்ட்ரி:

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நிற்க நேரமில்லாமல் படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் பகத் பாசில். இந்நிலையில் தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது. தற்போது வெளிவந்த தகவலின் படி பாலிவுட் இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.


இந்த திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, இருப்பினும் தென்னிந்திய சினிமா பார்த்த பகத் பாசிலின் நடிப்பை இனி பாலிவுட் சினிமாவும் பார்க்கும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story