இந்தியாவிலே முதல் முறை!.. ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் டீசர் எப்படி இருக்கு?..
GV Prakash: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வருபவர் நடிகர் ஜிவி பிரகாஷ். இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கியிருந்த இவர் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டானார். இவரது இசையில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
அதிலும் ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், சூரரைப் போற்று போன்ற திரைப்படங்களில் இவரின் பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இருப்பினும் ஹீரோவாக டார்லிங் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஜிவி பிரகாஷ் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.
இசையமைப்பாளராக இவர் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தாலும் ஒரு நடிகராக ஜெயிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இவரது இசையில் கடந்த ஆண்டு வெளியான இரண்டு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தீபாவளி பண்டிகைக்கு தமிழ் சினிமாவில் வெளியான அமரன் திரைப்படமும், தெலுங்கு சினிமாவில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படமும் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் தனது 25வது படமாக கிங்ஸ்டன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி இயக்கி இருக்கின்றார். மேலும் தயாரிப்பாளராக ஜிவி பிரகாஷ் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்திருக்கின்றார். ஏற்கனவே இவர்கள் இருவரும் காம்போவில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்திய சினிமாவிலேயே கடல் பின்னணியில் திகில் சாகச படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் கடலில் இருக்கும் மர்மத்தை கண்டறியும், மீனவர் ஒருவரின் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருக்கின்றார்.
இதுவரை இல்லாத அளவுக்கு புதுவிதமான கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷ் நடித்திருப்பது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த 6ம் தேதி இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இதனை தொடர்ந்து இன்று இப்படத்தின் டீசரை நடிகரும் இயக்குனருமான தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
இந்த டீசரை பார்க்கும்போது இது முழுக்க முழுக்க கடலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது தெளிவாகத் தெரிகின்றது. கடலில் நடக்கும் மர்மமான விஷயங்கள் அதாவது கடலில் திடீரென்று காணாமல் போகும் படகுகள் மற்றும் மனிதர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை எடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த டீசரில் பேயும் நிஜம் சாவும் நிஜம் என்கின்ற வசனம் திரில்லாக இருக்கிறது. நிச்சயம் ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இசையமைப்பாளராக ஜொலித்து வரும் ஜிவி பிரகாஷ் நிச்சயம் இந்த திரைப்படத்தின் மூலமாக ஒரு ஹீரோவாகவும் பிரபலமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.