விஜய்க்கு சுத்தமா அந்த ஞானமே இல்லை!.. ஏபிசிடி கூட தெரியாது?.. என்ன ஜீவா இப்படி உடைச்சிட்டாரு!..

Vijay: தளபதி விஜய் தன்னிடம் கேட்ட ஒரு சந்தேகம் குறித்து ஜீவா பேசி இருக்கும் வீடியோவை விஜய் ஹேட்டர்கள் எக்ஸில் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
உச்ச நடிகராக இருக்கும் விஜய் கோலிவுட்டை தாண்டி தற்போது அரசியலில் கால் பதிக்க இருக்கிறார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருப்பதை போல விமர்சிப்பவர்களும் தற்போது அதிகமாகி இருக்கின்றனர்.
அந்த வகையில் அவரின் பழைய வீடியோக்களை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். இதில் நடிகர் ஜீவாவின் வீடியோ தற்போது செம டிரெண்டிங்கில் இருக்கிறது. அதில் அவர் பேசும் போது, விஜயிற்கு கிரிக்கெட் விளையாட தெரியாது.
முதல்முறையாக ஐபிஎல் போட்டியை நானும், அவரும் பார்க்க சென்றோம். அப்போ பவுண்ட்ரி போன பந்தை பார்த்து இது ஃபோர்ரா? சிக்ஸா என்றார். அவ்வளவுதான் தெரியும் அவருக்கு. நான் சிரித்துக்கொண்டே அண்ணா நீங்க தான் சிஎஸ்கே பிராண்ட் அம்பாசிடர் என்றேன்.
ஆனால் ஜேசன் சஞ்சயிற்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இதனால்தான் வாரிசு ஷூட்டிங்கில் படக்குழு கிரிக்கெட் விளையாடிய போது விஜய் அம்பயராக நின்றாராம்.
பொதுவாகவே ஜீவா மனதில் தோன்றுவதை ஓபனாக பேசும் பழக்கம் கொண்டவர். அந்த வகையில் தான் இதை சிரித்து கொண்டு சொல்லி இருக்கிறார். மேலும் விஜயிற்கு கிரிக்கெட் தெரியவில்லை என்றாலும் பிரபலங்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிக்கு கூப்பிட்டதால் வந்து சென்றதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.