அடுத்த படம் அன்பு - அறிவு படம் இல்ல!.. கமல் கொடுத்த செம டிவிஸ்ட்!…
கமலுக்கு கை கொடுக்காத தக்லைப்:
Kamalhaasan: கமலின் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2, தக் லைப் இரண்டு படங்களும் அவருக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமையவில்லை. எனவே அடுத்து நடிக்கப்போகும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளதூ. ஏற்கனவே சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பு-அறிவு என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்த கமல் திட்டமிட்டிருந்தார். இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகவே வெளியானது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
ரஜினியுடன் இணைந்து ஒரு படம்:
ஒரு பக்கம் ரஜினியும் கமலும் பல வருடங்களுக்கு பின் இணைந்து ஒரு ஒரு படத்தின் நடிக்கவிருக்கிறார்கள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் எனவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஒரு விழாவில் கமலும் இதை உறுதி செய்தார்.
ஆனால் ரஜினியோ நாங்கள் இணைந்து நடிக்கப் போவது உண்மைதான். ஆனால் கதையும், இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை என சொல்லியிருந்தார். எனவே இந்த படத்தை லோகேஷ் இயக்குவாரா அல்லது வேறு இயக்குனர் வருவாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது.
பேன் இண்டியா சினிமாவில் நடிக்கும் கமல்:
கமல் அடுத்து அன்பறிவு இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலோ கல்கி 2 படத்தில் இணையவிருக்கிறார். ஏற்கனவே கல்கி 2898 ad திரைப்படம் போன வருடம் வெளியாகி நல்ல வசூலை பெற்றது, இப்படம் நாக் அஸ்வின் இயக்கியிருந்த இந்த படம் தெலுங்கு தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது இந்த படத்தில் தீபிகா படுகோனே பிரபாஸ் அமிதாபச்சன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இரண்டாம் பாகத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். இந்நிலையில்தான் விரைவில் கமல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். முதல் பாகத்தில் கடைசியில் சில நிமிடங்கள் மட்டுமே கமலை காட்டி இருந்தார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் சுமார் 90 நிமிடங்கள் கமல் வருகிறாராம்.
அவருக்கான படப்பிடிப்பு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களில் நடக்கவிருக்கிறது. ஜனவரியில் இருந்து பிரபாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். ஒருபக்கம் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனக்கூறி இந்த படத்திலிருந்து தீபிகா படுகோனேவை தயாரிப்பு நிறுவனம் தூக்கி விட்டதால் அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமலின் லைன்-அப்கள்:
- Kalki 2898 AD இரண்டாம் பாகம்
- அன்பு-அறிவு இயக்கத்தில் ஒரு படம்
- ரஜினியோடு இணையும் படம்
