இந்த வயசலையும் ரொமான்ஸ்!.. சிம்புவுக்கு சித்தி திரிஷா?!. ரசிகர்களுக்கே இந்த படம் தக் லைப்தான்!..

Thug Life: தமிழ் சினிமாவில் ரொமான்ஸுக்கு பெயர் போனவர் கமல்ஹாசன். அதனால்தான் இவருக்கு காதல் மன்னன் என்கிற பட்டம் கிடைத்தது. துவக்கத்தில் நிறைய காதல் படங்களில் மட்டுமே நடித்தார் கமல், திரைப்படங்களில் பல நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்திருக்கிறார். தன்னை விட வயதான பெண்ணை காதலிப்பது போன்ற கதாபாத்திரத்தில் கூட கமல் நடித்திருக்கிறார்.
வாணி கணபதி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஒரு வருடத்தில் அவரை பிரிந்தார். அதன்பின் நடிகை சரிகாவை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வாழந்தனர். முதல் மகள் ஸ்ருதி பிறந்த பின்னரே அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஒருகட்டத்தில் கமலும், சரிகாவும் பிரிந்துவிட்டனர். அதன்பின் நடிகை கவுதமியுடன் லிவ்விங் டூ கெதரில் இருந்தார் கமல். அதுவும் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆனது.
கமலையும் ரொமான்ஸையும் பிரிக்கவே முடியாது. கமல் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் நடிகைகளுக்கு கொடுக்கும் லிப் கிஸ்தான். புன்னகை மன்னன் ரேகா துவங்கி சண்டியர் அபிராமி வரை பலருக்கும் உதட்டு முத்தம் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். கமல் எப்படியும் முத்தம் கொடுப்பார் என பயந்து அவருடன் நடிக்காமல் போன நடிகைகளும் இருக்கிறார்கள்.
கமல் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு கமலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கிறார். சிறுவனாக இருக்கும் சிம்புவை கமல் தத்தெடுத்து வளர்ப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது.
கமலின் மனைவியாக அபிராமி நடித்திருக்கிறார். அதேநேரம், திரிஷாவுடன் கமல் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தது. சிம்பு கமலின் மகன் எனில் திரிஷா சிம்புவுக்கு சித்தியா?’ என கேள்வி எழுப்பி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சிம்புவும், திரிஷாவும் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் செம ரொமான்ஸ் செய்திருப்பார்கள். அப்படிப்பட்டவரை எப்படி சிம்புவின் சித்தியாக பார்க்க முடியும் என ரசிகர்கள் ஃபீல் பண்ண துவங்கிவிட்டனர். தக் லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.