அண்ணன விட தம்பி ரொம்ப பிஸி!.. அடுத்த 2 வருஷத்துக்கு கையில பிடிக்க முடியாது போலயே..
நடிகர் கார்த்தி:
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகராக இருக்கின்ற கார்த்தி கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன்.
96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திவுடன் இணைந்து அரவிந்த் சாமியும் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் ஒரு தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் நடிகர் கார்த்தி அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது ஒன்பது திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார். அந்த படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். மெய்யழகன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் கார்த்தி இணைந்த திரைப்படம் வா வாத்தியாரே. இந்த திரைப்படத்தை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கி வருகின்றார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் இந்த திரைப்படமும் கார்த்திக்கு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்னர் டாணாக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் இருக்கின்றார். இந்த மூன்று திரைப்படங்களை முடித்த கையோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து கைதி 2 திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அடுத்தடுத்து பார்ட் 2 படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் கார்த்தி.
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா 2 திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். பின்னர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் 2-வது பாகத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது ஒன்பது படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார் நடிகர் கார்த்தி. இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜப்பான் மற்றும் மெய்யழகன் 2 திரைப்படங்களும் தோல்வி படங்களாக அமைந்த நிலையில் அடுத்ததாக வெளியாகும் வாத்தியாரே திரைப்படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அண்ணன் சூர்யாவை விட படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் கார்த்தி.