எனக்கு சிம்ரனா? ஆவ்ரேஜான நடிகை போதும்..கொத்தா கிடைச்சும் வேண்டானு மறுத்த நடிகர்
தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். ஆரம்பத்தில் ஆர்ஜேவாக இருந்த சிம்ரன் ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகுதான் தமிழுக்கு அடியெடு வைத்தார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்தார்.
ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் போன்ற படங்களில் கவர்ச்சி நடனத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இடுப்பழகி என்ற பட்டத்திற்கு சரியாக பொருந்தினார். அவருடைய ப்ளஸே அவரின் இடுப்புதான். வளைத்து நெளிந்து ஆடுவதில் தனி கிரேஷை உருவாக்கினார். அந்த நேரத்தில் டாப் ஹீரோக்களாக திகழ்ந்த விஜய், அஜித், பிரசாந்த் இவர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த், முரளி, சரத்குமார் என 80கள் தலைமுறை நடிகர்களுக்கும் ஜோடியாக மாறினார். சிம்ரன் இருக்கிற வரைக்கும் வேறெந்த நடிகையாலும் அவ்வளவு எளிதாக புது முக நடிகைகளால் உள்ளே நுழைய முடியவில்லை. அந்தளவுக்கு மிகவும் பிஸியான நடிகையாக மாறினார்.
இந்த நிலையில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாகவும் சிம்ரன் கமிட் ஆகியிருந்தாராம். கருணாஸ் ஹீரோவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படமாக திண்டுக்கல் சாரதி திரைப்படம் அமைந்தது. இந்த படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் முதலில் ஒப்பந்தம் செய்தது சிம்ரனைத்தானாம். சிம்ரன் தனக்கு ஹீரோயின் என்றதும் எந்த நடிகராவது வேண்டாம் என்று சொல்வார்களா?
ஆனால் கருணாஸ்தான் சிம்ரன் வேண்டாம் சார். ஆவ்ரேஜான நடிகை இருந்தாலே போதும். அந்த நடிகை கூட பாதியிலேயே ஓடி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் சிம்ரன் என்று சொன்னால் என் பேரைக் கேட்டாலே ஓடிப் போயிடுவாங்க. அதனால் சிம்ரன் வேண்டாம் என கருணாஸ் கூறியிருக்கிறார்.