மக்கள் செல்வன் மகாராஜாவுக்குப் பிறந்தநாள்... வாழ்த்திய பிரபலம் என்னென்ன சொல்றாருன்னு பாருங்க...
நடிப்பில் எந்தவித பின்புலமும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர்கள் என்றால் ஒரு சிலரைத்தான் சொல்ல முடியும். அவர்களில் ஒருவர் தான் விஜய் சேதுபதி. இவர் இயல்பாக நடிப்பதில் வல்லவர். யதார்த்தம் என்றால் என்னன்னு தெரியாதவர்கள் கூட இவரது நடிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
எளிய தோற்றம்: அதே போலத் தான் இவர் பேசும் டயலாக்குகளும் இருக்கும். நம்மில் ஒருவராகத் தென்படும் எளிய தோற்றம் என இவருக்கு நிறைய பிளஸ்கள் உண்டு. இவர் திரையில் வரும்போது நமக்கு இவர் உணர்ச்சிவசப்பட்டு நடிக்கிறார் என்றே தோணாது.
அதே நேரம் எவ்வளவு கனத்த ரோலைக் கொடுத்தாலும் எளிமையாக நடித்து கைதட்டலைப் பெற்று விடுவார். இவரது இந்தத் தனித்திறன் இவரது கதைத்தேர்வுகளிலும் தொடர தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ஆனார். இவர் கடைசியாக நடித்த மகாராஜா படம் சீனாவிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
மக்கள் செல்வன்: இவ்வளவு பெரிய சாதனையைப் படைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தற்போது இவர் நடத்தும் பிக்பாஸ் சீசன் 8 இவருக்கு மற்றொரு அந்தஸ்தைத் தந்துள்ளது. 100 நாள்கள் தாக்குப்பிடிப்பாரா, கமல் அளவுக்கு இல்லை என்றவர்கள் எல்லாம் இது இவரது ஸ்டைல் என்று ஒத்துக் கொண்டு வருகிறார்கள்.
திரையுலகில் விஜய் சேதுபதியை ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று அழைக்கிறார்கள். இவருக்க இன்று பிறந்தநாள். நடிகர் கருணாஸ் இவருக்கு வாழ்த்து சொல்லியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
துபாய் வேலை: குடும்பத்தைக் காப்பாற்ற துபாய் சென்று ஒரு கணக்காளராக வேலை பார்த்தவர் நடிகர் விஜய் சேதுபதி. பின்னர் அது செட்டாகாமல் திரும்ப இந்தியா வந்து சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தார். அன்று வேலை செய்த அதே துபாய் நாட்டின் கோல்டன் வீசை பெற்றார் விஜய் சேதுபதி.
கருணாஸ் வாழ்த்து: இவரது பிறந்தநாள் இன்று தான். இதை முன்னிட்டு அவரை பிரபல நடிகர் கருணாஸ் வாழ்த்தியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. தமிழர் வாழ்வியல் அடையாளங்களைத் தன் தீரமிக்க திரை நடிப்பில் தொடர்ந்து வெளிக்காட்டும் மண்ணின் கலைஞன் தம்பி விஜய் சேதுபதி. உண்மை, உழைப்பு, உயர்வு என்று முக்கோணத்தின் உச்சத்தில் ஏறி நின்று வெற்றியை மட்டுமே காணும் நடிகர்.
அண்ணன் நான் வாழ்த்துகிறேன். தொடர்ந்து மக்கள் செல்வனாய் கலையின் செல்வனாய் வாழ எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் கருணாஸ்.