வந்துட்டாரு அடுத்த விஜய் சேதுபதி!.. அவமானங்களை தாண்டி வளர்ந்த மணிகண்டன்!..

by Murugan |   ( Updated:2025-02-01 09:20:09  )
வந்துட்டாரு அடுத்த விஜய் சேதுபதி!.. அவமானங்களை தாண்டி வளர்ந்த மணிகண்டன்!..
X

Manikandan: சினிமா எப்போது யாரை மேலே கொண்டு போகும், யாரை கீழே தள்ளும் என கணிக்கவே முடியாது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் பல வருடங்கள் அதற்காக உழைப்பதோடு, அதற்கான தகுதிகளையும், திறமைகளையும் வளர்த்துகொள்பவர்களை சினிமா மட்டுமல்ல.. எந்த துறையும் கை விடாது.

சினிமாவில் வாய்ப்பு: சினிமா மீது காதலோடு, கடுமையாக உழைத்தவர்கள் பெரிய இடத்திற்கு போயிருக்கிறார்கள். இப்போது நாம் கொண்டாடும் எல்லா நடிகர்களும் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்கள்தான். வெற்றிக்கு பின்னால் பல வருட உழைப்பு இருக்கிறது. சினிமாவில் சாதிக்க நம்பிக்கை மட்டும் போதாது. உழைப்பு, ஆர்வம், தன்னை வளர்த்து கொள்ளும் திறன், வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது என நிறைய இருக்கிறது.


ரைட்டர்: இது எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்போதுதான் ஒருவருக்கு வெற்றி கிடைக்கும். அப்படி இப்போது வந்திருப்பவர்தான் மனிகண்டன். நண்பர்களுடன் சேர்ந்து யுடியூப் சேனலை நடத்தி வந்தார். மணிகண்டன் நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு கிரியேட்டர். கதை, வசனம் எழுதுவார். ஒரு படத்தை இயக்கியும் உள்ளார். விஜய் சேதுபதி - மாதவன் நடித்த விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியவர் இவர்தான்.

மேலும், விஸ்வாசம், கார்த்தி நடித்த தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியது மணிகண்டன்தான். ஜெய் பீம் படத்தில் ராஜாக்கண்ணுவாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். காலா படத்தில் ரஜினியின் மகன்களில் ஒருவராக நடித்திருந்தார்.


சினிமாவில் ஹீரோ: குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் ஹிட் அடித்தது. அடுத்து அவர் நடித்த லவ்வர் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்பம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு மிடில்கிளாஸ் மணிகண்டன் என்கிற பட்டத்தை ரசிகர் ஒருவர் கொடுத்தார்.

மிமிக்ரி கலைஞர்: மணிகண்டன் ஒரு சிறந்த மிமிக்ரி கலைஞர், ரஜினி, கமல், அஜித், டெல்லி கணேஷ், சிவக்குமார் போன்ற பல நடிகர்களின் குரலை அப்படியே பேசுவார். பல படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். ஆங்கிலத்தில் வெளியாகி தமிழில் டப் செய்யப்படும் பல கார்ட்டூன் திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களுக்கு பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாகவே அவரின் வீடியோக்கள்தான் சமுகவலைத்தளங்களில் வைரலாக ஓடிக்கொண்டிருக்கிறது. பல அவமானங்கள், கேலி கிண்டல்கள், தோல்விகளை தாண்டியே இப்போது மணிகண்டன் வந்திருக்கிறார். இவரை இன்னொரு விஜய் சேதுபதி என ரசிகர்கள் பேச துவங்கிவிட்டார்கள்.

வாழ்த்துக்கள் மணிகண்டன்!...

Next Story