எனக்கும் கையெல்லாம் நடுங்குது!.. குடும்பஸ்தன் ரெஸ்பான்ஸுக்கு நன்றி சொன்ன மணிகண்டன்!..

by Murugan |   ( Updated:2025-01-23 17:01:28  )
எனக்கும் கையெல்லாம் நடுங்குது!.. குடும்பஸ்தன் ரெஸ்பான்ஸுக்கு நன்றி சொன்ன மணிகண்டன்!..
X

Kudumbasthan : பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ரஜினியின் இளைய மகனாக நடித்திருந்தார் மணிகண்டன். அதன்பின் ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு என்கிற படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த படம் முழுக்கவே ராஜாக்கண்ணு என்கிற கதாபாத்திரத்தின் கொலை பற்றியே ஆராயும்.

ஒரு நிஜக்கதை என்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் மணிகண்டனின் நடிப்பில் வெளிவந்த குட்நைட் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அவரின் லவ்வர் படமும் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது. சினிமாவுக்கு வருவதற்கு முன் யுடியூப்பில் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வந்தார்.

மணிகண்டன் மிமிக்ரி: நரை எழுதும் சுயசரிதம் என்கிற திரைப்படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார். இந்த படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை பெற்றிருக்கிறது. இவர் ஒரு நல்ல மிமிக்ரி கலைஞரும் கூட. இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கும், மனோபாலாவுக்கும் டப்பிங் பேசியவர் இவர்தான். கோட் படத்தில் வரும் கேப்டம் விஜயகாந்தின் குரலும் இவருடையதுதான்.


இவர் ஒரு ரைட்டரும் கூட. விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதியவர் இவர்தான். இந்நிலையில்தான், இவரின் நடிப்பில் உருவாகியுள்ள குடும்பஸ்தன் திரைப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. ஆனால், பத்திரிக்கையாளர்களுக்கு இப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

குடும்பஸ்தன்: குடும்பஸ்தன் ஒருவன் குடும்பத்தை ஓட்ட பல இடங்களில் கடன் வாங்கி எப்படி வாழ்க்கையை ஓட்டுகிறான் என்பதை ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், செய்தியாளர்கள் முன்பு பேசிய மணிகண்டன் ‘குட் நைட், லவ்வர் என இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றபின்பும் இன்னமும் ஒரு படம் வெளியாகும்போது ரிசல்ட் என்னவாகுமோ என பதட்டமாக இருக்கிறது. இப்போதும் என் கைகள் நடுங்குகிறது.

எனது வெற்றியில் 50 சதவீத பங்கு உங்களையே சேரும். நேற்று கூட எனக்கு நம்பிக்கை கொடுக்கும்படி பல பத்திரிக்கையாளர்கள் மெசேஜ் அனுப்பினார்கள். பலமுறை நாங்கள் படம் பார்த்துவிட்டதால் ஸ்பெஷலாக எங்களுக்கு ஒன்னும் தோன்றவில்லை.இப்போது நீங்கள் படம் முடிந்து சிரித்துக்கொண்டே வருவதை பார்த்தபின்னரே எனக்கு நிம்மதி வந்திருக்கிறது. எனக்கு ஆதரவாக நிற்கும் உங்கள் எல்லோருக்கும் நன்றி’ என பேசினார்.

Next Story