ஹாட்ரிக் வெற்றிதான் போலயே!.. சோசியல் மீடியாவில் பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்..!

by Ramya |
kudumbasthan
X

Kudumbasthan: தமிழ் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் யூடியூப் சேனல் நடத்தி வந்தவர் மணிகண்டன். சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த இவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார். இயக்குனர் பா ரஞ்சித் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய போது தான் காலா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதனை தொடர்ந்து காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா, சில்லு கருப்பட்டி, சில நேரத்தில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படங்களில் எல்லாம் நடித்த போதிலும் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறாத மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரியக்கூடிய ஒரு நடிகராக மாறினார்.


இந்த திரைப்படம் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து குட் நைட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு லவ்வர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஹீரோவாக நடித்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது குடும்பஸ்தன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக வினோத்குமார் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றார்.

இப்படத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, இயக்குனர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான முதல் திரைப்படமாக குடும்பஸ்தன் திரைப்படம் இருக்கின்றது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு என்று ஸ்பெஷல் பிரிமியர் ஷோ போடப்பட்டது.

அதில் படத்தைப் பார்த்த அனைவரும் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து குடும்பஸ்தன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இன்றைய தலைமுறையை சேர்ந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களை மையப்படுத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்கள்.


படம் தொடங்கியது முதல் கிளைமேக்ஸ் வரை நகைச்சுவை காட்சிகளால் குடும்ப ரசிகர்களை எளிதாக கவரும் வகையில் படம் இருக்கின்றது என்று தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. படம் நாளை வெளியாகும் நிலையில் பிரீமியர் ஷோவிலேயே படம் வெற்றி பெற்றுவிட்டது என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். தொடர்ந்து மூன்றாவது முறை ஹீரோவாக ஜெயித்து இருக்கின்றார் மணிகண்டன்.

குட் நைட், லவ்வர் தொடர்ந்து குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து வெற்றி நாயகனாக ஜொலித்து வருகின்றார் மணிகண்டன். பொதுவாக ஒரு நடிகர் ஒரு வெற்றி படத்தை கொடுத்தாலே தான் தான் பெரிய ஹீரோ என்று அலட்டிக் கொள்ளும் நிலையில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் மிக சிம்பிளாக இருந்து வருகின்றார் மணிகண்டன்.

Next Story