நடிகர் சங்கம் நக்கிட்டு கெடக்கு... அந்தப் படம் வந்தா போதையை ஒழிச்சிடலாம்... மன்சூர் 'பளார்' பேச்சு
நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் அவ்வப்போது மனதில் படும் சில விஷயங்களைத் துணிச்சலாகப் பேசி விடுவார். அப்படி போதை ஒழிப்பு பற்றி தற்போது பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க. இளைஞர்கள், சின்னப்பசங்க எல்லாம் நாசமாப் போயிட்டாங்க.
எப்படி திருந்துவான்?: தமிழக முதல்வர் டிவில தோன்றி போதையை ஒழிக்கிறேன்னு சொல்றது ஏற்புடையது அல்ல. அவன் எப்படி திருந்துவான்? டாஸ்மாக்குங்கறது போதை இல்லையா? நான் நாலு கோடி போட்டுப் படம் எடுத்தேன். 2012ல அதிரடின்னு ஒரு படம் எடுத்தேன். டாஸ்மாக் கடையில போயி மக்கள் கால்ல விழுந்து குடிக்காதே குடிக்காதேன்னு சொன்னேன்.
2012ல எடுத்து வெளியிட்டேன். என் காசைத் தான் போட்டேன். அதுக்கு ஒரு மானியம் கொடுக்கல. ஒரு பூனையும் கொடுக்கல. இப்ப சரக்குன்னு ஒரு படம் எடுத்தேன். நாலு கோடிக்கு மேல ஆயிடுச்சு. இடத்தை வித்து கைகாசு போட்டு தான் எடுத்தேன்.
பல சிக்கல்: அதனால யாரும் அசிங்கமாகிடக் கூடாது. அதை வெளியிட்டதுலயே பல சிக்கல். எல்லா இடத்துலயும் வந்து தடுக்குறாங்க. காலைல 10.30மணிக்கு ஷோவுக்கு டைம் கேட்டா கமலா தியேட்டருக்கு எதிரில நைட் பத்தரை மணிக்குக் கொடுக்குறாங்க.
அந்த நேரத்துல எவனாவது என் படத்தைப் பார்க்க வருவானா? நான் என்ன தல அஜீத்தா? இல்ல தளபதி விஜயா? அப்படி அங்கயும், இங்கயும் தவறான திரையரங்குகள்ல கொடுத்தாங்க.
போதையை ஒழிச்சிடலாம்: சரி. ஓடிடிலயாவது போடலாம்னா குறைஞ்ச விலைக்கு விற்றேன். ஒன்றரை வருஷமாச்சு. ஓடிடிலயும் போட விடமாட்டேங்கறாங்க. அந்தப் படம் வந்தாலே போதையை ஒழிச்சிடலாம். டாஸ்மாக்கை எதிரா மக்கள் போராடுவாங்க.
நக்கிட்டு கெடக்கு: அந்தக் கதை அமைப்பு அப்படித்தான். நிறைய நடிகர், நடிகைகளை வச்சி எடுத்தேன். அதை வெளியிடறதுக்கே தடுக்குறாங்க. நடிகர் சங்கம் நக்கிட்டு கெடக்குது. புரொடியூசர் சங்கம் படுத்துக்கிடக்கு. யாரும் எந்திரிக்கவே இல்ல. இதை வேதனையோடு சொல்றேன் என்று மன்சூர் அலிகான் சொன்னார்.
பையனுக்கு 'பளார்': அப்போது குறுக்கிட்ட நிருபர் உங்க பையனே போதையில சிக்கிருக்கானேன்னு கேட்டதுக்கு நான் தான் பிடிச்சிக் கொடுத்தேன். அவன் சிகரெட் பிடிப்பான்னு கூட தெரியாது. 'பளார்'னு அந்த இடத்துலயே அறை விட்டேன்.
போலீஸ் நாங்க பார்த்துக்கறோம். விட்டுருவோம்னு சொன்னாங்க. ஆனா எப்ஐஆர்லாம் போட்டு வச்சி செஞ்சிட்டாங்க. நேத்துத்தான் வந்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.