இமைக்கா நொடிகளைப் பார்த்துருப்பீங்க... ஆனா இது அதையும் தாண்டி... மாதவனின் அட்டகாசம்!

சினிமாவில் ஒரு கட்டம் வரை தாக்குப்பிடிக்கும் ஹீரோக்கள் போட்டியின் காரணமாக தன்னை மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் எனவும் பல்வேறு வகையில் விதவிதமான முயற்சிகளில் ஈடுபட்டு நடிக்கிறாங்க. அந்த வகையில் தனது கண்ணை ரொம்பவே சிரத்தை எடுத்த பிளைண்ட் மேனாக மாறியவர் நடிகர் விக்ரம்.
இவர் காசி படத்துக்காக அப்படி நடித்தார். அதே போல இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தில் நடிகர் விஷால் கண்களைத் தூக்கி சொருகியபடி படம் முழுவதும் நடித்திருப்பார். கண் தெரியாதவராக நடிக்கணும்னா காதல் ஓவியம் படத்தில் வரும் கண்ணனைப் போல கண்ணின் கருவிழியை மேலே தூக்கி வெறும் வெண்விழிப்படலம் மட்டும் தெரிவது போல பல நடிகர்களும் நடித்திருப்பார்கள். அதை ரசிகர்களும் பிரமித்துப் பார்ப்பார்கள்.
மாதவன்: அந்த வகையில் விஷால் கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்ணை தூக்கி சொருகியபடி நடித்தது ஒற்றைத் தலைவலியில் கொண்டு போய்விட்டு விட்டது. அந்த அவஸ்தையில் இன்று வரை நான் கஷ்டப்படுகிறேன் என்று சொல்லி இருந்தார். அதே போல நடிகர் மாதவனும் ஒரு படத்திற்குக் கண்ணை வைத்து நடிக்க கஷ்டப்பட்டுள்ளார். அது என்ன படம்? எப்படி நடித்தார் என்பதை அவரே சொல்றாரு பாருங்க.
4 நிமிஷம்: தம்பி படத்துல முழு படத்துலயும் இமைக்கக் கூடாதுன்னு சீமான் அண்ணன் சொல்லிட்டாரு. முழு படத்துலயும் நான் இமைக்கவே இல்லை. அதிலும் காலேஜ் சீன் ஒண்ணு வரும். அதுல 4 நிமிஷம் நான் இமைக்காம நடிச்சேன். சீமான் அண்ணே எப்படி பேசி இருப்பாரோ அதை தான் நான் காபி பண்ணினேன்.
இமைக்கா நொடிகள்: நயன்தாரா நடித்த திகில் படம் இமைக்கா நொடிகள். ஆனா இது நொடிகளையும் தாண்டி 4 நிமிடத்திற்கு இமைக்காமல் போயிருக்கே. ஆச்சரியம்தான். ஒரு காலத்துல சாக்லேட் பாயாக இருந்த மாதவனா இப்படி எல்லாம் நடிச்சாருன்னு வியக்க வைக்கிறார்.