1. Home
  2. Cinema News

ரோபோ சங்கர் இறந்த பிறகு காரணம் சொல்லாதீர்கள்!.. மன வருத்தத்துடன் கூறிய எம்.எஸ்.பாஸ்கர்

ரோபோ சங்கர் இறந்த பிறகு காரணம் சொல்லாதீர்கள்!.. மன வருத்தத்துடன் கூறிய எம்.எஸ்.பாஸ்கர்

ரோபோ சங்கர் :

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். மதுரை மண்ணைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலங்களில் மதுரையில் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

அதன்பிறகு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. கலக்கப்போவது யாரு முதல் சீசன் முதல் போட்டியாளராக ரோபோ சங்கர் தனது திறமையை வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்த உடன் இணைந்து காமெடி ரகளை செய்திருப்பார்.

சின்னத்திரை கலைஞன் :

தனக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி ரசிகர்களை entertain செய்து வந்ததால் வெள்ளித்திரையில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகும் TV shows மற்றும் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் , reality show judge என்று பயணித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பான top cook doop cook season 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில வாரங்களுக்கு முன் அதில் eliminate ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ சங்கரின் இறுதி நாட்கள் :

சமீபத்தில் நடைபெற்ற இளையராஜாவுக்காக தமிழக அரசால் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் கூட கலந்து கொண்டிருப்பார். இந்நிலையில் நேற்று உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ரோபோ சங்கர். ஏற்கனவே இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதை அவர் பல நேர்காணலில் ஒப்புக்கொண்டுள்ளார்.” நான் 60 ரூபாய் பாட்டில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பாட்டில் வரை எல்லாம் பார்த்திருக்கிறேன். நான் போகாத flight கிடையாது கிடையாது. Luxury carல் பயணித்திருக்கிறேன்”. என்று அவரை சொல்லி இருக்கிறார்.

ரோபோ சங்கர் மரணம் :

அதீத குடிப்பழக்கத்தால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது காலம் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலன் இன்றி இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இவர் இறப்பதற்கு பல காரணங்கள் வந்து கொண்டிருக்கிறது.

எம்.எஸ். பாஸ்கர் இரங்கல் :

இந்நிலையில் ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்த எம்.எஸ்.பாஸ்கர்,”இறந்த பிறகு அதுதான் காரணம் இதுதான் காரணம் என்று குற்றம் குறை சொல்வதில் அர்த்தமில்லை. ரோபோ போல அவர் நடனமாடும் காலத்தில் இருந்தே அவரை பார்த்து இருக்கிறேன். தங்கமான குணம் கொண்டவர் அவர் மகள் தான் சமீப நாட்களில் அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்”. என்று தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.