ரஜினியோடு அமீர்கான் நடிக்கவே இல்லை!.. போட்டு உடைச்சிட்டாரே நாகார்ஜுனா!...

by MURUGAN |
coolie
X

Coolie Nagarjuna: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் கூலி. இந்த படத்தில் ரஜினி ஹீரோ என்றாலும் பல மொழிகளில் இருந்தும் பல நடிகர்களையும் கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் கூலியை பேன் இண்டியா படமாக வெளியிட்டு 1000 கோடி வசூலை அள்ள திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதற்காக நாகர்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், சௌபின் சாஹிர் என ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு நடிகரை தூக்கி வந்திருக்கிறார்கள். மேலும், சத்யராஜும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 30 வருடங்களுக்கு மேல் இவர் ரஜினியுடன் நடிக்காமல் இருந்தார். இடையில் சிவாஜி உள்ளிட்ட சில படங்களில் வாய்ப்பு வந்தபோதும் நடிக்க மறுத்துவிட்டார்.

இப்போது லோகேஷ் கனகராஜ் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதோடு, ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி நடிப்பதை பார்த்து ‘யார் வேண்டுமானலும் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால், ரஜினி சார் மட்டும்தான் ஹீரோவாகவே வாழ்கிறார்’ என லோகேஷிடம் சொன்னாராம் சத்தியராஜ். இதை லோகேஷே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.


கூலி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நாகார்ஜுனா. ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் அவர் கூலி படம் பற்றி நிறைய பேசி வருகிறார். ஏற்கனவே இதுவரை இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. கூலி படம் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘2025ல் எல்லோராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக கூலி இருக்கிறது. இதற்கு நடிகர்கள் மட்டுமல்ல. இயக்குனர் லோகேஷ் ஒரு முக்கிய காரணம். அமீர்கானோடு நான் எந்த காட்சியிலும் நடிக்கவில்லை. ஆனால், அவரின் நடிப்பை பார்த்து வியந்தேன். இந்த படத்தில் 2 சேப்டர் இருக்கிறது. இந்த படத்தில் நான் வில்லன் என்பதால் ரஜினியோடு எனக்கு நிறைய காட்சிகள் இருக்கிறது. ஆனால், அமீர்கான் ரஜினியோடு ஒரு காட்சியிலும் நடிக்கவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

விக்ரம் படத்தின் இறுதியில் ரோலக்ஸாக சூர்யா கலக்கியிருந்தாலும் கமலுடன் அவருக்கு ஒரு காட்சியும் இருக்காது. அதுபோல, கூலி படத்திலும் அமீர்கான் ஒரு பக்கா கேமியோ வேடத்தில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story