நான் காண்டம் வாங்க சொன்னேனா!.. மனசே வலிக்குது.. நடிகைகள் பத்தி தப்பு தப்பா.. பொங்கி எழுந்த நகுல்!..

நடிகை தேவயாணியின் தம்பியும் நடிகருமான நகுல் கடைசியாக வாஸ்கோடகாமா படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்த நகுல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் சுனைனாவுடன் இணைந்து ஹீரோவாக நடித்து அசத்தினார்.

குண்டு பாயாக இருந்த நகுல் அந்த படத்திற்காக தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து விட்டு “நாக்க மூக்கா” பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வரிசையாக சுனைனாவுடன் இணைந்து சில படங்களில் நடித்தார்.

மாசிலாமணி படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த படத்திலும் சுனைனாவுடன் இணைந்து “ஓடி ஓடி விளையாட வாடா” பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார். நகுல் மற்றும் சுனைனா ஜோடி ஹிட் அடித்த நிலையில், திடீரென நகுலுக்கு அவர் தேர்வு செய்யும் படங்கள் சொதப்ப ஆரம்பித்தன.

முன்பு போல வெற்றிக் கிடைக்காமல் கிடைத்த படங்களில் நடித்து வந்த நகுலுக்கு ஒட்டுமொத்தமாக மார்க்கெட்டில் சரிவு மட்டுமே நிலவியது. இந்நிலையில், சமீபத்தில் நகுல் நடித்த வாஸ்கோடகாமா திரைப்படமும் வெளியாகி வழக்கம் போலவே சொதப்பியது.

சினிமாவில் வெற்றி தோல்விகள் வருவது எல்லாம் சகஜம் தான். ஆனால், நகுல் பற்றி திடீரென உதவி இயக்குநர் சந்துரு பேசிய வார்த்தைகள் தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை சுனைனா தான் வேண்டும் என்றும் அவர் தான் அட்ஜெஸ்ட் பண்ணுவார் என நகுல் சொன்னதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போதே உதவி இயக்குநரிடம் காண்டம் வாங்கிக் கொண்டு வரச் சொன்னதாகவும் நடிகைகள் அர்த்தனா பினு மற்றும் சுனைனாவுடன் நகுல் நெருக்கம் காட்டி வருகிறார் என்றும் ஏகப்பட்ட சர்ச்சை விஷயங்களை யூடியூப் சேனல் ஒன்றில் சந்துரு பேசியது சினிமா வட்டாரத்தில் பூகம்பத்தை கிளப்பியது.

இந்நிலையில், அதில், எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் அதனால் தான் மனம் நொந்து போயுள்ளதாகவும் நடிகைகள் பற்றியும் தப்புத் தப்பாக பேசிய அந்த உதவி இயக்குநர் சந்துரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகுல் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it