நந்தாவுக்கு என்ன மாஸ்னு பாருங்க... பிட்னஸைப் பார்த்து அசந்த விஜய்... 3 நாளாக பேசத் துடித்த விஜயகாந்த்!

by SANKARAN |
actor nandha, vijay, vijayakanth
X

நடிகர் நந்தா தனது திரையுலக அனுபவங்;களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக விஜய், விஜயகாந்துடன் சந்தித்த சில அனுபவங்களையும் இங்கு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

புன்னகைப்பூவே ஆடியோ ரிலீஸ்ல தான் நான் முதல்ல விஜயைப் பார்த்தேன். அப்போ ப்ரண்ட்ஸ் படம் சூட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு. அப்போ தாணு சார் 'உன்னோட பர்ஸ்ட் படம். உனக்காகத் தான் நான் படம் பண்றேன். யாரை வச்சி நீ ஆடியோ ரிலீஸ் பண்ணனும்னு நினைக்கிறீயோ அவங்களைக் கூட்டிட்டு வர்ரேன்'னு சொன்னார்.

விஜய் அண்ணா வந்தா நல்லாருக்கும்னு சொன்னேன். சரி யாரு வாங்கிக்கலாம்னு கேட்டு சூர்யா உன் ப்ரண்டு தானே. அவரை வாங்கச் சொல்லிடலாமான்னு கேட்டார். நான் ஓகே சொன்னேன். இளையதளபதி விஜய் வெளியிட சூர்யா பெற்றுக் கொள்கிறார்னு அழைப்பிதழ் வருது.

எனக்கு அது பெரிய கூஸ்பம்ப்ஸா இருந்தது. 'தம்பி தான் நீங்க வரணும்னு ஆசைப்படுறார்'னு தாணு சார் விஜய் சார்கிட்ட சொன்னார். அப்போ பைட் எல்லாம் போட்டுக் காமிச்சிருக்காரு. விஜய் சார் பைட், சாங்ஸ் எல்லாம் ரொம்ப நல்லாருந்துச்சுன்னு பாராட்டுனாரு.

அடுத்து 2வது முறையா மேரேஜ்க்காக விஜய் சாரை நேரில மீட் பண்ணப் போறேன். ஜில்லா படம் விஜய்க்கு நடந்துக்கிட்டு இருக்கு. ஈரம், வேலூர் மாவட்டம் படம் எல்லாம் பார்த்தேன். ரொம்ப நல்லாருந்ததுன்னு சொன்னாரு. அப்போ விஜய் சார், வேலூர் மாவட்டத்துல எப்படி பாடி பிட்னஸ் கொண்டு வந்தீங்க? அருமையா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டார்.


விஜயகாந்த் தலைமையில சிங்கப்பூர், மலேசியாவுல நடிகர் சங்க பங்ஷன் நடந்தது. அப்போ தான் நான் பர்ஸ்ட் படம் பண்ணிருக்கேன். அப்போ நான் 'ஆணி வேர்'னு ஒரு படம் பண்ணிருந்தேன். அது இங்கே ரிலீஸ் ஆகல.

அப்போ விஜயகாந்த் சார் கனடாவுல இருந்தாரு. அங்க படத்தைப் பார்த்துருக்காரு. என்னைத் தொடர்பு கொண்டு பேச முயற்சி பண்ணிருக்காரு. எனக்கு போன் நம்பர் கிடையாது. என் செல் நம்பர் சுவிட்ச் ஆப்னு வந்துருக்கு. அப்போ நான் வெளியூர் சூட்டிங்ல இருந்தேன். அந்த லொகேஷன்ல போன் எடுக்காது.

அப்புறம் அவரு ஆபீஸ்ல இருந்து நேரில ஒருவர் வந்து எங்கிட்ட விஜயகாந்த் சார் பேசணும்னு ட்ரை பண்றதா சொன்னாரு. 3 நாள் கழிச்சி கனடாவுல இருந்து ட்ரங்க் கால் போட்டு எங்கிட்ட பேசினாரு. படத்தைப் பற்றி எங்கிட்ட ஒவ்வொரு சீனா கேட்டாரு. 'எல்லாரும் அங்கே எப்படி இருக்காங்க?'ன்னு எல்லாம் கேட்டாரு.

அப்புறம் சென்னை வந்தபிறகு என்னை வரவழைச்சி 4 மணி நேரம் எங்கிட்ட பேசினாரு. இது உண்மையிலே நடந்ததான்னு கேட்டு ஆச்சரியமா பேசினாரு. அது எனக்கு பெரிய பாக்கியமா கருதுறேன்னு சொல்கிறார் நடிகர் நந்தா.

Next Story