Categories: Cinema News

Nepoleon: ஆறு மாதம் கழித்து தனுஷுக்கு ‘மீண்டும்’ திருமணம்?

தமிழின் பிரபல நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு சமீபத்தில் ஜப்பானில் வைத்து திருமணம் செய்தார். இதில் கோலிவுட்டில் இருந்து சுஹாசினி, மீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

தசைச்சிதைவு

தனுஷ் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். இதுபோன்ற திருமணத்திற்கு அமேரிக்காவில் அனுமதி இல்லை. எனவே தான் ஜப்பானில் அமெரிக்காவை விட 4 மடங்கு அதிகம் செலவு செய்து நெப்போலியனை திருமணம் செய்தார்.

Also Read: Kollywood: இந்த வருஷம் வெளியான படத்தில் அதிக வசூல்!.. விஜய் கூட லிஸ்ட்டில் இல்லையே!…

இந்த திருமணத்திற்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தாலும் கூட அந்த பெண்ணின் நிலையினை எண்ணி வருத்தமும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இரண்டு தரப்பினரும் விரும்பி தான் பரஸ்பரம் திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால் இதில் வருத்தப்பட எதுவுமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

150 கோடி ரூபாய்

nepoleon and son

சுமார் 150 கோடி ரூபாய் வரை நெப்போலியன் இந்த திருமணத்திற்காக செலவழித்து இருக்கிறார். திருமணம் முடிந்தாலும் இன்னும் இரண்டு மாதங்கள் தனுஷ்-அக்ஷயா இருவரும் ஜப்பானில் தங்கியிருந்து சுற்றிப்பார்த்து விட்டு பின்னர் அமெரிக்கா திரும்புவர் என தெரிகிறது.

மீண்டும் திருமணம்

Also read: Nepoleon: அவனோட கனவு எங்களுக்கு முக்கியம்!… மருமகள் சொன்ன அந்த வார்த்தை!… எமோஷனலான நெப்போலியன்..!

இந்தநிலையில் இன்னும் 6 மாதம் கழித்து தனுஷுக்கு மீண்டும் திருமணம் செய்ய நெப்போலியன் திட்டமிட்டு இருக்கிறாராம். ஜப்பானின் சட்ட திட்டங்கள் அமெரிக்காவுக்கு செல்லாது என்பதால், அந்த நாட்டு முறைப்படி மீண்டும் தனுஷ்-அக்ஷயா இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருப்பதாக நெப்போலியன் தெரிவித்து இருக்கிறார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v