டைரக்டர் ரெண்டு மணி நேரமாக கதை சொன்னதும் உத்துப் பார்த்த நட்டி... இது வேற லெவலா இருக்கே!
சீசா படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் இந்தப் படத்திற்குள் எப்படி வந்தார் என்பது பற்றி இவ்வாறு பேசியுள்ளார்.
இயக்குனர் குணா 2 மணி நேரத்துக்குள்ள இந்தக் கதையை சொன்னாங்க. கதையை சொன்னதும் அவரையே உத்துப்பார்த்தேன். எப்படி இது உங்களுக்குத் தோணுச்சு... இந்தக் கதையை எங்க புடிச்சிங்கன்னு கேட்டேன். நான் யாருக்கிட்டேயும் பிராப்பர் அசிஸ்டண்ட்டா ஒர்க் பண்ணல.
நான் ஜெனரலா அப்சர்வ் பண்ணித்தான் வந்தேன்னு சொன்னாரு. படத்தோட கதையைத் தயாரிப்பாளர் செந்தில்வேலன் தான் சொன்னாங்க. நான் திரைக்கதை தான் எழுதிருக்கேன்னாரு.
நான் உடனே சொன்னேன். இந்தப் படம் பண்ணலாம் சார்னு. ஏன்னா அந்தக் கதையை அவ்வளவு சாதாரணமா சொல்லிட முடியாது. அதை யோசிக்கிறதும் அவ்வளவு கஷ்டம். ஏன்னா பை போலார் டிஸ்ஆர்டர்ங்கறது எல்லாருக்குள்ளேயும் இருக்கு.
அது ஆழ்மனசுல கொண்டு போய் உங்களை சேர்க்கும்போது உங்களோட வெளிப்பாடு என்ன நடக்கும்னு உங்களுக்குத் தெரியாது. என்ன ஆகும்? ஒரு மனிதனை எந்த இடத்துக்குக் கடத்தும்னு தெரியாது. அது எதுல வேணாலும் வரலாம். உதாரணத்துக்கு இந்தப் படத்தோட டைரக்டர் குணாவுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.
அப்படி ஆனாலும் லொகேஷன் பார்க்கணும்னு சொல்லி வந்தாரு. இல்ல சார். ரெஸ்ட் எடுத்துக்கோங்கன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் ரொம்ப முடியாம போனதும் அவரோட ப்ரண்டை அனுப்பி அந்த போர்ஷனை எடுக்க வச்சாரு.
இது எதுக்கு சொல்றேன்னா நம்மால சூட்டிங் நின்றுட கூடாதுங்கற பயத்துனால உருவானதுதான். தனக்குத்தானே டெவலப் பண்ணிக்கிட்டாhரு. இது ஒரு மனச்சிதைவு தான். இது ஏற்படுற எல்லாமே ரிஸ்கான விஷயம் தான். சொசைட்டில இப்படி ஒரு பிராப்ளம் இருக்குங்கறது நிறைய பேருக்குத் தெரியாது.
ஒரு காலத்துல சில மலையாளப்படங்கள்ல தான் நான் இந்த மாதிரி பார்த்துருக்கேன். அப்படி இந்த மாதிரி விஷயத்தை ரொம்ப லைட்டா ஹேண்டில் பண்ணின படம் மனசுக்குள் மத்தாப்பு. ஆனா இது கொஞ்சம் டீட்டெய்லா சொல்லும். இது சொசைட்டிக்கு ரொம்ப முக்கியமான விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.