‘ஜனநாயகன்’னு பேர் வச்சா போதுமா? இத மறந்துட்டாரே? விஜயை விளாசும் பிரபல நடிகர்

விஜய் குறித்து நெப்போலியன் சமீபகாலமாக காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகிறார். இப்போது கூட நெப்போலியன் பேசிய சில விஷயங்கள் வைரலாகி வருகிறது. அதாவது சமீபத்தில் இப்போது ஜனநாயகன் என்ற ஒரு படம் நடித்திருக்கிறார். இதில் ஜனநாயகம் என்றால் நமக்கு ஞாபகத்திற்கு வருவது ஜனநாயகமா இருக்க வேண்டும், நடுநிலையாக இருக்கணும், நியாயமாக இருக்கணும் அப்படித்தான் அர்த்தம். அந்த மாதிரி ஜனநாயகன் டைட்டில் வைத்து படம் நடிக்கிறார். ஜனநாயகத்தில் நான்கு தூண்கள் என்று சொல்வார்கள். நான்கு தூண்கள் என சொல்லும்போது சட்டத்துறை நீதித்துறை நிர்வாகம் பத்திரிக்கை துறை என நான்கு துறைகள் இருக்கின்றது.
சட்டமன்றத்திற்கு முதலமைச்சராக போக வேண்டும் என ஆசைப்படுகிறார். இன்று கரூர் சம்பவத்திற்காக நீதித்துறையை நாடி நீதிமன்றத்திற்கு போய்விட்டார். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரைக்கும் பத்திரிக்கை துறையை சந்திக்கவே இல்லை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒரு துணை மட்டும் சந்திக்கவே இல்லை.
முற்காலியாகத்தான் இருக்கின்றது. நான்கு பக்கமும் அவருடைய கவனத்தை செலுத்த வேண்டும். பத்திரிக்கை துறையை நீங்கள் சந்திக்காமலே இருக்கிறீர்கள். அது உண்மையிலேயே தவறு. நடிகராக இருக்கும் போதும் நீங்கள் யாரையுமே சந்திக்கவே இல்லை. அது வேற ஒரு விஷயம். ஆனால் அரசியலுக்கு என வந்த பிறகு பத்திரிக்கை துறையை நிச்சயமாக சந்திக்க வேண்டும்.
வாரத்தில் ஆறு நாள்கள் என கணக்கில் வைத்து பிரச்சாரம் பண்ணும் போது சரிப்பா நாளை நம்மூருக்கு வருவார். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என மக்கள் அமைதியாக காத்திருப்பார்கள். ஆனால் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் தேர்ந்தெடுத்து அவர் பிரச்சாரம் வரும் போது உதாரணமாக கரூருக்கு வரும் போது சுற்றிலும் இருக்கும் மாவட்ட ரசிகர்கள் தொண்டர்கள் என மொத்தமாக கூடுகிறார்கள்.
அந்த கூட்டத்தை காட்ட வேண்டும் என்றுதான் விஜயும் ஆசைப்படுகிறார். மக்களுக்காக வாரத்தில் ஒரு நாள்தான் அவர் வேலை செய்கிறார். மீதி நாள்கள் அவர் லீவு எடுத்துக் கொள்கிறார். மக்களோடு பயணிங்க. எல்லாத்தையும் விட்டுட்டு வர்றேனு சொல்லும் போது மக்களோடு மக்களாக இருங்க, ஏன் சாட்டர்ட் ஃபிளைட்டில் வர்றீங்க? ஏன் சென்னையில் தங்குறீங்க? வீட்லதான் தங்குவேனு சொன்னால் பேசாமல் வீட்டிலேயே இருங்க.