அஜித் மட்டும் கால்ஷீட் கொடுக்கட்டும்! இப்படி ஒரு படம் பண்ண ரெடி.. பார்த்திபனுக்கு இருக்கும் ஆசை

0
111

தன்னுடைய படத்தை மக்கள் மத்தியில் நல்ல முறையில் சேர்ப்பதற்காக சமீபகாலமாக பார்த்திபன் பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அவர் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. அதற்கான பிரமோஷனில் தான் இப்போது பார்த்திபன் ஈடுபட்டு வருகிறார்.

அதுவும் இந்தியன் 2 படத்தோடு பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படமும் நேரடியாக மோத இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் பார்த்திபன் அஜித்தை பற்றி கூறிய ஒரு விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

ஏற்கனவே அஜித்தும் பார்த்திபனும் இணைந்து நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். ஆனால் அந்த படத்தை பற்றி கூறும் போது இரண்டு பேரும் ஒன்றாக நடித்தோமே தவிர ஒருமுறை கூட இருவரும் சேர்ந்து பேசியதில்லை என பார்த்திபன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஏனெனில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த அஜித் சில நாட்கள் மட்டுமே வந்து நடித்துக் கொடுத்தாராம். அதனால் அஜித்தை பார்க்கவே முடியவில்லை என்ற வகையில் பார்த்திபன் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அஜித்தை வைத்து ஒரு படம் எடுக்க நினைப்பதாகவும் அது எந்த மாதிரியாக படமாக இருக்கும் என்பதை பற்றியும் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

அஜித் இப்பொழுது எனக்கு கால்சீட் கொடுத்தால் கூட அந்த படத்தை எப்படி எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். வீரம் பட மாதிரி இல்லாமல் அவருடைய எல்லா படங்களும் ஒரே ஃபார்மெட்டில் இருக்கும். அப்படியும் இல்லாமல் வேறு மாதிரி எடுக்க வேண்டும் .

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை பார்த்தேன் .அதில் சில காட்சிகள் அஜித்தின் எக்ஸ்பிரஷன் மூலமாகவே நகர்ந்திருக்கும். அந்த அளவுக்கு அஜித்தின் எக்ஸ்பிரஷன் அந்த காட்சிகள் என்ன சொல்ல வருகிறது என்பதை நமக்கு தெளிவுப்படுத்தும். இப்படியும் நடிப்பாரா என்ற வகையில் என்னை பிரமிக்க வைத்தது.

அதுமட்டுமல்லாமல் இயக்குனரின் போக்கில் ஒரு பெரிய நடிகரை இப்படி எல்லாம் நடிக்க வைக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும் எனக்குள் வரவழைத்தது. அதனால் நான் எடுக்கும் படம் ஆக்சன் படமாகவும் ஆனால் எப்போதும் உள்ள ஃபார்மெட்டில் இல்லாத படமாகவும் ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் இருக்கும் என பார்த்திபன் கூறியிருக்கிறார்.

google news