அந்த வீடு என் பேருல இருக்கு.. நான் பாத்துக்குறேன்.. அன்னை இல்லம் பற்றி திட்டவட்டமாக கூறிய பிரபு

by Rohini |
prabhu
X

தமிழ் சினிமாவையும் தமிழ் மொழியின் பெருமையையும் உலக அளவில் கொண்டு சேர்த்ததில் சிவாஜியின் பங்கு மிக மிக முக்கியமானது. தன் நடிப்பின் மூலமாக தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு போய் சேர்த்தார் சிவாஜி கணேசன். அவருடைய நடையில் இருந்து ஒவ்வொரு அங்கமும் நடிக்கும் .கண் அசைவில் ஒரு நடிப்பு, நடையில் ஒரு நடிப்பு, சிரிப்பில் ஒரு நடிப்பு என எல்லாமே நடிப்பு நடிப்பு என்றுதான் இருந்தார் சிவாஜி.

கலைஞர் வசனத்தை ஊர் அறிய கொண்டு சேர்த்ததில் சிவாஜி பெரும் பங்கு வகித்தார். அந்த அளவுக்கு தன்னுடைய துடிப்பான நடிப்பால் கலைஞர் எழுதிய வீர வசனம் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனாலயே சிவாஜிக்கும் கலைஞருக்கும் இடையே ஒரு ஆழமான நட்பும் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 250 படங்களுக்கும் மேல் நடித்து நடிப்பிற்கே இமயம் போல் இன்றளவும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார் சிவாஜி கணேசன்.

எல்லா மொழிகளிலும் இவருக்கு என ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது. இப்படி கொடிகட்டி பறந்த சிவாஜியின் அன்னை இல்லம் இன்று நீதிமன்றம் வரை சென்றிருப்பது தான் அனைவருக்கும் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னை இல்லம் என்று சொல்வதை விட சென்னையில் இருக்கும் வெள்ளை மாளிகை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஏழையாக பிறந்து நாடகத் துறையில் கால் பதித்து அதன் மூலம் சினிமாவிற்குள் வந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய நடிப்பை மெருகேற்றி ஒரு நடிகரத்திலகமாக மாறி சேர்த்த சொத்து தான் இந்த அன்னை இல்லம்.

மூன்று கோடி கடனில் அப்பேர்ப்பட்ட ஒரு மாளிகை இன்று ஜப்தி செய்யப்படுவதாக வந்த செய்தி தான் அனைவருக்குள்ளும் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ஒரு படத்தை தயாரிப்பதற்காக மூன்று கோடி கடன் வாங்கி இன்று அது 9 கோடியாக வட்டி மேல் வட்டி உயர்ந்து நிற்கின்றது. அதை கொடுக்க முடியாமல் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் சிவாஜியின் வீடு என்ன ஆகும் என்பது தான் அனைவரின் கவலையாக இருந்தது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் நேற்று ஒரு பட விழாவில் பேசும்பொழுது பிரபு சொன்ன ஒரு விஷயத்தை பகிர்ந்தார். அன்னை இல்லம் பிரச்சினை பற்றி கே ராஜன் ஒரு youtube சேனலில் அழுது புலம்பியதை பார்த்த பிரபு கே ராஜனுக்கு போன் செய்து பேசினாராம்.

நீங்கள் பேசிய வீடியோவை பார்த்தேன். என்னை மிகவும் கண்கலங்க வைத்து விட்டது.. இருந்தாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அன்னை இல்லத்தை அப்பா என் பெயரில் எழுதிவிட்டு போயிருக்கிறார் .உள்ளுக்குள் ஏதோ நடந்திருக்கிறது. அது பற்றி தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக இந்த அன்னை இல்லம் ஏலம் போகாது .அதனால் தைரியமாக இருங்கள் என பிரபு கூறினாராம். இவர் இப்படி சொன்ன பிறகு தான் எனக்கு உயிரே வந்தது என கே ராஜன் அந்த பேட்டியில் கூறினார்.

Next Story