அடுத்த பிரபுதேவா ரெடி!.. அப்படியே அவர் மாதிரியே இருக்காரே!. செம வைப் போட்டோ!....

by Murugan |   ( Updated:2025-02-26 16:07:20  )
prabudeva
X

Prabudeva: 80களில் பல படங்களுக்கும் நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் சுந்தரம். அவருக்கு மூன்று மகன்கள். மூத்தவர் ராஜு சுந்தரம். அடுத்து பிறந்தவர்தான் பிரபுதேவா. சிறு வயது முதலே அப்பாவுக்கு உதவியாக திரைப்படங்களில் வேலை செய்தவர். மௌன ராகம் படத்தில் வரும் பனிவிழும் இரவு பாடலில் கூட பிரபுதேவா வருவார்.

அதேபோல், மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ பாடலிலும் கார்த்திக்குடன் இணைந்து நடனமாடியிருப்பார். ஒருகட்டத்தில் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அப்படி அவர் ஆடிய ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே, சூரியன் படத்தில் ‘லாலாக்கு டோல் டப்பிமா’, வால்டர் வெற்றிவேல் படத்தில் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்ன கடிக்குது’ பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்.


இந்த பாடல்களில் நடனமாடிய அவரின் ஸ்டைலை பார்த்து இந்திய மைக்கேல் ஜாக்சன் என எல்லோரும் அவரை புகழ்ந்தார்கள். அந்தன்பின் இந்து, காதலன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். காதலன் படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பல படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். அவர் நடித்த எல்லா படங்களிலும் அவரின் நடனத்திறமையை காட்டுவது போல பாடல்கள் இருக்கும்.

ஒருகட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். விஜயை வைத்து போக்கிரி, வில்லு உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சினிமாவில் நடனமாடிக்கொண்டிருந்த போதே ரம்லத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகன்கள். இதில் ஒருவர் பிரபுதேவா வில்லு படத்தை இயக்கிகொண்டிருந்தபோது நோய்வாய்பட்டு இறந்துபோனார். இடையில் நயன்தாராவுடன் காதல் ஏற்பட்டு மனைவியையும் பிரிந்தார். இப்போது பிரபுதேவா தனியாக வாழ்வதாகவே சொல்லப்படுகிறது.


சமீபத்தில் ‘ எனது மகன் திடீரென சினிமாவில் நடிக்க வேண்டும் என என்னிடம் கேட்டான். நான் உனக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன் என சொல்லிவிட்டேன். அவனின் திறமையால் வரட்டும்’ என சொல்லியிருந்தார். அனேகமாக அது அவரின் இளையமகன் ரிஷி ராகவேந்தர் தேவா என சொல்லப்படுகிறது. இந்நிலையில், கேரவானில் மகனுடன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘தொடர்ச்சி’ என பதிவிட்டிருக்கிறார்.

உடல் அமைப்பு, தாடி எல்லாம் பார்ப்பதற்கு பிரபுதேவாவை போலவே இருக்கிறார் அவரின் மகன் ரிஷி ராகவேந்தர் தேவா. இதைப்பார்த்த பலரும் குட்டி பிரபுதேவாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். ரிஷி ராகவேந்தர் தேவாவிரைவில் சினிமாவில் நடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story