படத்த பாத்துட்டு வரவங்க முகம் இப்படிதான் இருக்கும்.. டிராகன் படத்துக்கு வந்த முதல் விமர்சனம்..

by Ramya |
actor pradeep
X

Pradeep Ranganathan: தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் அதனை தொடர்ந்து கோமாளி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக லவ் டுடே என்கின்ற திரைப்படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமானார்.

ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. படம் பாக்ஸ் ஆபிஸில் 75 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு கம்மிட்டாகி பிஸியாக நடித்து வருகின்றார் பிரதீப் ரங்கநாதன்.


விக்னேஷ் சிவனுடன் எல்ஐகே: நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஒன்றரை வருடங்களாக எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடு இல்லை

டிராகன் திரைப்படம்: இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கின்ற திரைப்படத்தின் நடிப்பதற்கு கம்மிட் ஆனார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. விக்னேஷ் சிவனின் எல்ஐகே திரைப்படம் தாமதமாவதால் தற்போது அஸ்வந்த் மாரிமுத்து இயக்கி இருக்கும் டிராகன் திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

டிராகன் படத்தின் விமர்சனம்: அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகின்றது என எக்ஸிக்யூடிவ் புரொட்யூசரான அதிதி ரவிந்திரநாத் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் இந்த திரைப்படம் ஒரு பீல் குட் படமாக இருக்கும், என்னை சிரிக்கவும் அழவும் வைத்துவிட்டது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சினிமா விமர்சகர்கள் இந்த திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார்கள், அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது ' டிராகன் என்கின்ற பெயர் உண்மையாகவே இந்த கதைக்கு தொடர்புடையதா? அல்லது மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு டைட்டிலை வைத்தார்களா? என்று தெரியவில்லை.


ஆனால் படம் ஆரம்பித்து பத்தாவது நிமிடமே படத்தின் கதைக்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவந்து விடும். அந்த அளவிற்கு இந்த படத்திற்கு டிராகன் என்கின்ற பெயரை வைத்ததற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த மொத்த படத்திலேயே கடைசி 20 நிமிடங்கள் அவ்வளவு சூப்பராக இருக்கின்றது.

படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஒவ்வொருவரின் முகத்திலும் சூரியன் அடித்தது போல அவ்வளவு பிரகாசமாக இருக்குமாம். அந்த 20 நிமிடம் ஸ்கிரீன் பிளே அவ்வளவு சிறப்பாக இருக்கும்' என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Story