சிம்பு நடிக்க வேண்டிய படத்தில் ரஜினியா? இதென்ன புதுசா இருக்கு? போச்சா

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் சிம்பு என மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அனைவருமே எதிர்பார்த்தனர். மாநாடு திரைப்படம் அவருக்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. சிம்பு இனிமே படங்களில் நடிப்பாரா மாட்டாரா என்ற ஒரு விமர்சனம் இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ப்ளாக் பஸ்டர் படமாக மாநாடு திரைப்படத்தை கொடுத்தார் சிம்பு.

அதுவும் தன் உடலை இளைத்து செம யூத்தா வந்து நின்றார். அதை பார்த்ததுமே ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை வந்தது. இனிமே இவரும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்தனர். அதற்கேற்ப தொடர்ந்து வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்து படங்களை கொடுத்த சிம்பு கிட்டத்தட்ட ஒரு வருடம் மேலாகியும் இன்னும் அவரது நடிப்பில் படங்களே ரிலீஸாக வில்லை.

பத்து தல படத்திற்கு பிறகு கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரிய சாமி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆனார் சிம்பு. ஆனால் அறிவிப்போடவே நின்று போனது அந்தப் படம். இருந்தாலும் வேறொரு தயாரிப்பு நிறுனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் இணைந்தார். முதன் முறையாக கமலுடன் சேர்ந்து நடிப்பதால் அது சிம்புவுக்கே ஒரு கூஸ் பம்பாகத்தான் இருந்திருக்கும். ஓரளவு தக் லைஃப் படம் நிறைவடைந்த நிலையில் அடுத்த வருடம் படம் ரிலீஸாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியானது .ஆனால் அந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கபோவதாகவும் பெரிய பட்ஜெட் எனும் போது அதை தயாரிக்கும் வேல்ஸ் நிறுவனம் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றி புதுமையான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஜூட் ஆண்டனி மற்றும் சிம்பு இணையும் படத்தில் இப்போது சிம்பு இல்லை என்றும் அந்தப் படத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும் வேல்ஸ் தான் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஏற்கனவே வேல்ஸுக்கு ரஜினி ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தாராம். அதனால் இந்தப் படமாக கூட இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் ஒரு டாக் போய்க் கொண்டிருக்கிறது.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it