கதைகள் பல சொல்லி.. நம்பாதீங்க!.. ராஜ்கிரண் போட்ட பதிவு.. சீமானை செமத்தியா கலாய்ச்சிட்டாரு..!

by Ramya |
seeman
X

சினிமா துறையில் இருந்து வந்த பல பிரபலங்கள் அரசியலுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நடிகரும் இயக்குனருமான சீமான். திரைத்துறை மற்றும் அரசியல் என இரண்டிலும் ஈடுபட்டு வந்த சீமான் தமிழர் பிரச்சனைக்கு பிறகு தீவிரமாக அரசியலில் இறங்கினார். பின்னர் நாம் தமிழர் என்கின்ற கட்சியை தொடங்கி அதில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றார்.

ஆரம்பத்தில் பெரிய அளவு பிரபலமாக இல்லாமல் இருந்து வந்தாலும் படிப்படியாக தற்போது முன்னேறி இருக்கின்றார். அவ்வபோது சர்ச்சையான கருத்துக்களை பேசி சிக்கிக் கொள்வார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பெரியார் குறித்து ஒரு கருத்தை கூறியிருந்தார். இது பெரியாரின் ஆதரவாளர்களை கோபப்படுத்தியது. இதனால் தொடர்ந்து சீமானுக்கு கண்டனம் தெரிவித்து பெரியாரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


அதிலும் ஜனவரி 22 ஆம் தேதி நேற்று ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தார்கள். இது ஒரு புறம் இருக்க இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் பிரபாகரன் அவர்களோடு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பதாக கூறப்படும் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான் தான் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றார்.

இந்த செய்தியும் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பல ஆண்டுகாலமாக பிரபாகரன் அவர்களுடன் புகைப்படம் எடுத்தேன், ஆமை கறி சாப்பிட்டேன், துப்பாக்கி பயிற்சி எடுத்தேன் என்றெல்லாம் சீமான் கூறி வந்தது அனைத்துமே பொய்யா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இப்படி சீமான் குறித்து கடந்த சில தினங்களாக சமூக வலைதள பக்கங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு சீமான் அவர்களை மறைமுகமாக கூறுவது போன்று அமைந்திருக்கின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு என்று சிலரும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது சாதாரணமாக நடக்கும் விஷயம்.


இது போன்ற புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்று கூறிக்கொண்டு யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் கவனமாக இருங்கள். என்னிடம் யார் சிபாரிசும் எடுபடாது. என் விஷயங்களில் நான் மட்டுமே முடிவெடுப்பேன்.

என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு' என்று கூறியிருக்கின்றார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் புளு சட்டை மாறன் அண்ணனை செமத்தியாக கலாய்த்து இருக்கிறாரே என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story