இது சும்மா டிரெய்லர்தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் பார்ப்பீங்க.. ரஜினி பற்றி ரமேஷ்கண்ணா சொன்ன தகவல்

by Rohini |
rajini
X

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இன்று தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. இந்த 50 ஆண்டுகளில் அவர் பார்க்காத தோல்விகள் இல்லை. வெற்றிகள் இல்லை. அவமானங்களும் இல்லை. எல்லாவற்றையும் கடந்து இன்று அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் ரஜினி.

முதல் அறிமுகம்: பாலசந்தரால் அடையாளம் காணப்பட்ட ரஜினி அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தான் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து அதன் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். பெரும்பாலும் கமலுடன் அதிக படங்களில் வில்லனாகவும் துணை நடிகராகவும் நடித்தார் ரஜினி.

ஹீரோவாக அறிமுகம்: இப்படி தொடர்ந்து வில்லன் , துணை நடிகர் என பல கேரக்டர்களில் நடித்து வந்த ரஜினி பைரவி என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தில் கமலையே மிஞ்சும் அளவுக்கு அவரின் நடிப்பு இருந்தது. அதனால் அனைவரின் பார்வையும் ரஜினி பக்கம் திரும்பியது. படமும் பெரிய அளவில் வெற்றிபெற தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படுகிறார் ரஜினி.

தனித்துவமான ஸ்டைல்; ரஜினியிடம் இருக்கும் தனித்துவமான பண்பு என்னவெனில் அவருடைய ஸ்டைல்தான். நின்றால் ஸ்டைல், உட்கார்ந்தால் ஸ்டைல் என எல்லாவற்றிலும் ஸ்டைல் காண்பித்தே ரசிகர்களை கவர்ந்தார். ஸ்டைல் என்றாலே ரஜினி என்றே ஆகிவிட்டது. இந்த நிலையில் பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறும் போது ரஜினியின் ஸ்டைல் பற்றியும் சில விஷயங்களை கூறினார்.

சும்மா டிரெய்லர்: அவர் சிகரெட்டை பற்ற வைத்தாலே ஸ்டைல்தான். இதே மாதிரி இன்னும் எத்தனையோ ஸ்டைல்கள் வைத்திருக்கிறார். படப்பிடிப்பில் பார்த்திருக்கிறோம். படத்தில் பார்ப்பதெல்லாம் சும்மாதான். இனி வரும் படங்களில் எல்லா ஸ்டைலையும் ஒருவேளை காட்டுவார் என்று ரமேஷ் கண்ணா கூறினார். முத்து படத்தில் பொன்னம்பலம் ஒரு சீனில் சிகரெட்டை பற்ற வைக்க வேண்டும்.

அதை ரஜினி வாங்கி எப்படி பற்ற வைக்க வேண்டும் என ஸ்டைலாக சொல்லிக் காட்டினாராம். அவர் சொன்னது மாதிரிதான் படத்தில் பொன்னம்பலம் செய்து காட்டியிருப்பார். அது ரஜினி ஸ்டைல்தான் என ரமேஷ் கண்ணா கூறினார். இருந்தாலும் ஏன் அண்ணே இந்த ஸ்டைலை நீங்க பண்ண வேண்டியதுதானே என ரமேஷ் கண்ணா ரஜினியிடம் கேட்ட போது ‘அட போப்பா.. இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. பரவாயில்லை’ என சொல்லிவிட்டு சென்றாராம் ரஜினி.

Next Story