விஜயின் தவெக அரசியல் மாநாடு மாஸ் வெற்றி!.. அட ரஜினியே சொல்லிட்டாரே!....
Rajini vijay: சினிமாவில் ரஜினி பார்த்து வளர்ந்த சிறுவன்தான் விஜய். விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினி ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடிக்கும்போது ரஜினியை பார்க்கும் ஆவலோடு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்தான் விஜய். இந்த புகைப்படம் இப்போதும் கூகுளில் இருக்கிறது.
ரஜினியின் படங்களை பார்த்து பார்த்து வளர்ந்தவர்தான் விஜய். துவக்கத்தில் விஜய் நடிக்கும் படங்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் சுவரில் ரஜினியின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இப்படி ரஜினியை காட்டி சினிமாவில் வளர்ந்தவர்தான் விஜய். ஆனால், வாரிசு பட விழாவில் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என சிலர் துதி பாட அதை அமைதியாக ரசித்தார் விஜய்.
இது ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்த டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். விஜய் படம் வந்தால் ரஜினி ரசிகர்கள் மோசமாக விமர்சிப்பதும், ரஜினி படம் வெளியானால் அசிங்கமான ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வதும் வழக்கமானது.
ஜெயிலர் பட விழாவில் காக்கா கழுகு கதையை ரஜினி சொல்ல அது விஜயை என நினைத்த ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். அது விஜயை இல்லை என ரஜினி சொல்லியும் அவர்கள் மாறவில்லை. ரஜினியின் ஜெயிலர் படம் வெளியான போது விஜய் ரசிகர்களும், விஜயின் லியோ, கோட் ஆகிய படங்கள் வெளியானபோது ரஜினி ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு வன்மத்தை கக்கினார்கள்.
நடிகர் விஜய் சமீபத்தில் தனது தமிழக் வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தினார். அதில், ஆக்ரோஷமாக பல விஷயங்களை பேசியிருந்தார். அவரின் பேச்சு திரையுலகில் ஆச்சர்யத்தையும், அரசியல்வட்டாரத்தில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், விஜய் அப்படி பேசுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இந்நிலையில், இன்று தீபாவளி என்பதால் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்வதற்காக ரஜினி வெளியே வந்து எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து சொன்னார். அப்போது விஜயின் மாநாடு பற்றி அவரின் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ரஜினி விஜயின் மாநாடு உண்மையிலேயே பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்’ என சொல்லியிருக்கிறார்.