Robo Shankar: நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் மரணம்!…
Robo Shankar: விஜய் டிவியில் ஒளிபரப்பான பல காமெடி நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களிடம் பிரபலமானவர் ரோபோ சங்கர். கமலின் தீவிர ரசிகர் இவர். விஜய் டிவி மட்டுமல்லாது தமிழகமெங்கும் பல ஊர்களுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை ரசிக்க வைத்தவர் இவர் .இதைத் தொடர்ந்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
தனுசுடன் மாரி, விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், அஜித்துடன் விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரோபோ சங்கருக்கு தினமும் மது பழக்கம் இருந்ததால் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து கல்லீரலும் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மருத்துவர்களின் சிகிச்சையில் உடல் நலம் தேறினார் ரோபோ சங்கர். அதோடு தனது மகள் இந்திரஜாவுக்கு திருமணமும் செய்து வைத்தார்..
திருமணம் நிச்சயக்கப்பட்டது முதல் குழந்தை பிறந்தது முதல் எல்லாவற்றையும் செய்திகளாக்கி ஊடகங்களில் வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில்தான் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் தற்போது அவர் மரணம் அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
