மதகஜராஜா செஞ்ச வேலை!.. ஓவரா ஆட்டம் போடும் சந்தானம்.. ஹீரோவ விட ஜாஸ்தியா இருக்கே!..

Actor Santhanam: தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனை போலவே டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் சந்தானம். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சந்தானம் தனது காமெடி திறமை மூலமாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் இணைந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்கின்ற அளவுக்கு படு பிஸியாக நடித்து வந்த சந்தானம் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று முடிவெடுத்தார்.
ஹீரோவான சந்தானம்: கண்ணா லட்டு திங்க ஆசையா என்கின்ற திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே தற்போது வரை நடித்து வருகின்றார். காமெடியனாக நடித்த போது டாப்பில் இருந்த சந்தானம் ஹீரோவாக நடிக்க தொடங்கியதற்கு பிறகு பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
மதகஜராஜா வெற்றி: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு உருவான திரைப்படம் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, மனோபாலா, மணிவண்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
படம் அப்போது ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் 12 வருடங்களுக்கு கழித்து கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. சொல்லப்போனால் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படங்களிலேயே மதகஜராஜா திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது .
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படம் இவ்வளவு பெரிய வரவேற்பு பெற்றதற்கு சந்தானமும் ஒரு காரணம். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் மீண்டும் சந்தானம் காமெடியனாக நடிக்க வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மீண்டும் காமெடியனாகும் சந்தானம்: நடிகர் சந்தானம் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் தற்போது சிம்பு நடிக்கும் ஒரு திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க இருக்கின்றார்.
அந்த திரைப்படத்தில் காமெடியனாக சந்தானத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து சுந்தர் சி விஷால் மீண்டும் இணையும் ஆம்பள 2 திரைப்படத்திலும் சந்தானத்தை காமெடியனாக நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். ஆனால் நடிகர் சந்தானம் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் 8 கோடி ரூபாய் வரை பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்களாம்.