என் வயசு 26.. இந்த சின்ன பொண்ணு என் கூட ஜோடி!.. பிரஸ் மீட்டில் வம்பிழுத்த நாட்டாமை!..
நடிகர் சரத்குமார்: தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் சரத்குமார். இவர் தி ஸ்மைல் மேன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இது இவரின் 150வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இதனால் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும் இருந்து வருகின்றார்.
இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றளவும் பிரபலமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சரத்குமார் தி ஸ்மைல் மேன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சனிக்கிழமையான நேற்று தி ஸ்மைல் மேன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரமான ஆழியாவும் அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் சரத்குமாரை அங்கிள் என்று அழைத்தார். அதன் பிறகு ஒவ்வொருவராய் பேச நடிகர் சரத்குமாரும் கலகலப்பாக பேசியிருந்தார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நான் எப்போதும் இளமை தான். எனக்கு வயசு ஆகாது. சொல்லப்போனால் ஆழியா வளர்ந்து என் படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. யார் சொன்னது எனக்கு அவ்வளவு வயதாகி விட்டது என்று இப்போது எனக்கு வயது 26 தான் வேண்டுமென்றால் 30 வயது என்று வைத்துக் கொள்ளலாம்.
மேலும் ஆழியா தன்னை அங்கிள் என அழைத்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றேன். அதைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் நடிகர்களை கூத்தாடிகள் என்று சொல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் அரசியலில் நடிகர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு நன்றாக தெரியும் என்று பதில் அளித்திருந்தார்.
பின்னர் சூரியவம்சம் 2 அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்குமார் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி விரைவில் இது தொடர்பான தகவலை அறிவிப்பார் என்று கூறியிருந்தார். பிரஸ் மீட்டில் நடிகர் சரத்குமார் கலகலப்பாக பேசியிருந்தது அங்கு இருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியது.