ரஜினி படம் பார்த்து கெட்டுப்போனேன்!.. இப்ப அலார்ட் ஆயிட்டேன்!.. சசிக்குமார் ஓப்பன்!..

by MURUGAN |
sasikumar
X

Sasikumar: சுப்பிரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். அந்த படம் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது. ‘இப்படி படம் பண்ண முடியுமா?’ என பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் போன்ற இயக்குனர்களையே ஆச்சர்யப்பட்ட வைத்த திரைப்படம் இது. இந்த படத்தை பார்த்துவிட்டு மும்பைலிருந்து சென்னை வந்து சசிக்குமாரை நேரில் சந்தித்து பாராட்டி விட்டு சென்றார் அவர்.

சுப்பிரமணியபுரம் ஹிட்டுக்கு பின் அதே ஸ்டைலில் பல படங்கள் வந்தது. ஈசன் என்கிற படத்தை இயக்கினார் சசிக்குமார். அதன்பின் முழு நேர நடிகராக மாறினார். தொடர் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் அவரால் மீண்டும் இயக்குனராக முடியவில்லை. ஆனாலும் விரைவில் அவரை இயக்குனராக பார்க்கலாம் என்கிறார்கள். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து ஒரு வெப் சீரியஸ் எடுக்கும் எண்ணம் அவரிடம் இருக்கிறது.

திரைத்துறையில் சசிக்குமார் வேறுபட்டவர். எந்த சர்ச்சையிலும் சிக்கமாட்டார், சர்ச்சையாக பேச மாட்டார், எங்கேயும் எந்த பந்தாவும் செய்யமாட்டார். எல்லோருக்கும் பிடித்த ஒரு நடிகராக இருக்கிறார். நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்றே எல்லோரும் பேசுகிறார்கள். ஒரு படம் ஓடினாலே படத்தின் சம்பளத்தை 200 சதவீதம் ஏற்றிவிடும் நடிகர்கள் மத்தியில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் சூப்பர் ஹிட் அடித்தும் ‘நான் சம்பளத்தை ஏற்றமாட்டேன்’ என ஓப்பனாக மேடையில் பேசினார்.


சசிக்குமாரின் தயாரிப்பு நிறுவனத்தை அவரின் உறவினர் அசோக் குமார் கவனித்து வந்தார். பாலாவை வைத்து தாரைப்பட்டை படத்தை தயாரித்தில் பல கோடி நஷ்டமடைந்தார் சசிக்குமார். அது தொடர்பாக பிரபல ஃபைனான்சியர் அன்பு செழியன் தரப்பு கொடுத்த அழுத்தத்தில் அசோக் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் சசிக்குமார் புகார் கொடுத்தார்.

அந்த கடனிலிருந்து மீள கிடைத்த எல்லா படங்களிலும் நடித்தார் சசிக்குமார். இதில், சில மொக்கை படங்களும் அடக்கம். பணத்துக்காகவே நடித்தேன். இப்போது அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி, ஃப்ரீடம் போன்ற நல்ல கதைகளில் நடிக்கிறேன் எனக் கூறினார். இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய சசிக்குமார் பல விஷயங்களை மனம் விட்டு பேசினார்.

பணத்தை பற்றி இப்போது புரிந்துகொண்டேன். புரிந்துகொண்டேன் என்றால் பணத்தை மதிக்க கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் பணத்தை மதிக்க மாட்டோம். வெறும் பணம்தானே என சொல்லி சொல்லி பழகி சிலர் என்னை பயன்படுத்திகொண்டனர். தளபதி படத்தில் ரஜினி சார் ‘வெறும் பணம்’ என ஒரு வசனம் பேசுவார். அதெல்லாம் பார்த்து பார்த்து நாங்க பணத்தை மதிக்கவே இல்லை. ஆனால், அந்த பணம் 40 வருஷமா என்னை மதிக்காமா இருக்கியா என என்னை வச்சி செய்தது. அதை மதிக்க வைத்தது. அதைத்தான் பணத்தோட குணமா நான் பாக்குறேன்’ என சொல்லியிருக்கிறார்.

Next Story