ஜெயம் ரவி படத்தில் இணைந்த பிரபல இயக்குனரின் மகன்!.. படத்தோட ஸ்கிரிப்ட் இதுவா?.. தேறுமா!..
நடிகர் ஜெயம் ரவி:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த இவரின் படங்கள் சமீப காலமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரதர் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி படுதோல்வியை சந்தித்தது.
இருப்பினும் தொடர்ந்து நம்பிக்கையை கைவிடாத ஜெயம் ரவி அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி:
நடிகர் ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த திரைப்படத்தை சுதா கொங்குரா இயக்க இருக்கின்றார். இப்படத்தின் பூஜை இன்று தொடங்கி இருக்கின்றது. தவான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஜேஆர் 34:
நடிகர் ஜெயம் ரவி கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே ஒரு வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த இறைவன், சைரன், பிரதர் என அனைத்துமே தொடர்ந்து தோல்விகள் தான். இதனால் அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகின்றார் ஜெயம் ரவி. தொடர்ந்து இளம் இயக்குனர்கள் மற்றும் முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார்.
அந்த வகையில் தற்போது டாடா திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு உடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இந்த படத்திற்கு ஜேஆர் 34 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பூஜையும் இன்றைய தினம் சிறப்பாக போடப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் வரும் 16ஆம் தேதியிலிருந்து துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர ஆறுமுகம் தயாரிக்க இருக்கின்றார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கின்றார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் வாசுவின் மகனும், நடிகருமான சக்தி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார்.
மேலும் இப்படம் முழுக்க முழுக்க வடசென்னை போன்ற கதைகளை சார்ந்து இருக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே வடசென்னை சார்ந்து பல திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த திரைப்படம் ஜெயம் ரவிக்கு வெற்றி கொடுக்குமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.