இதுக்காடா இவ்வளவு பில்டப்?!.. இத்தனை வருஷம் போச்சே!.. இயக்குனரை கழட்டிவிட்ட சிம்பு..
STR49: துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் 2020ம் வருடம் வெளியானது. இந்த படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர். இந்த படத்தை பார்த்துவிட்டு தலைவர் எப்போது என்னை கூப்பிடுவார் என காத்திருக்கிறேன் என ஓப்பனாக பேட்டி கொடுத்தார். அவர் ஆசைப்பட்டது போலவே அவரை ரஜினி அழைத்து படத்தை பாராட்டி பேசிய ரஜினி வழக்கம்போல ‘எனக்கும் ஏதாவது ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார். அட தலைவரே கேட்டு விட்டாரே என அவருக்கு ஒரு கதையை சொன்னார் தேசிங்கு.
ரஜினிக்கு பிடித்திருந்ததால் சில மாதங்கள் அமர்ந்து முழு கதையையும் உருவாக்கினார். அது ஹீரோ இரட்டை வேடத்தில் நடிக்கும் ஒரு சரித்திர கதை. கதை நன்றாக இருந்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் ‘இவ்வளவு பட்ஜெட்டை இவர் தாங்குவாரா?’ என யோசித்த ரஜினி ‘நீங்க போய் வேறு நடிகர்களை வைத்து படம் பண்ணிட்டு வாங்க.. இது அப்புறம் பார்ப்போம்’ என சொல்லி அனுப்பி விட்டார். இதிலேயே ஒரு வருடம் போய்விட்டது.
அதன்பின் அதே கதையை சிம்புவிடம் தேசிங்கு சொல்ல அந்த கதை அவாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அப்போது அந்த படத்தை தயாரிக்க கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் முன்வந்தது. இயக்குனருக்கு ஆபீஸ் எல்லாம் போட்டு கொடுத்து வேலைகள் நடந்தது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் படம் துவங்கப்படவில்லை.
புது படங்களுக்கு அதிக தொகையை கொடுத்து வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் அந்த படங்களால் நஷ்டங்களை சந்தித்ததால் தங்கள் விலைகளை குறைத்து விட்டன. அது இந்த படத்திலும் எதிரொலிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பின் வாங்கியது. அதற்கு பதிலாகத்தான் தக் லைப் படத்தில் நடித்து கொடுத்தார் சிம்பு. தேசிங்கு சொன்ன கதையை விட மனமில்லாத சிம்பு பல தயாரிப்பார்களிடமும் பேசினார். இந்த படத்திற்காகத்தான் நீண்ட தலை முடியை வளர்க்க துவங்கினார் சிம்பு..
ஒரு வழியாக இப்படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் நிறுவனம் முன்வந்தது. தக் லைப் படம் பெரிய ஹிட் அடிக்கும்.. எனவே இந்த பட்ஜெட்டில் படம் எடுத்தால் தப்பித்துக் கொள்ளலாம் என ஏஜிஎஸ் நிறுவனம் கணக்கு போட்டது. ஆனால் தக் லைப் படம் ஓடவில்லை. எனவே இந்த பட்ஜெட்டில் சிம்புவை வைத்து இப்போது படம் எடுப்பது சரியாக இருக்காது என நினைத்த ஏஜிஎஸ் நிறுவனம் பின்வாங்கி விட்டது.
எனவே இப்படத்தை சிம்புவே தயாரிக்க முடிவெடுத்தாக செய்திகள் வெளியானது. சிம்புவின் 49 வது படத்தை பார்க்கிங் பட இயக்குனரும், 50-வது படத்தை அஸ்வத் மாரிமுத்துவும், சிம்புவின் 51வது படத்தை தேசிங்கு பெரியசாமியும் இயக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். எனவே காத்திருந்தார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்பதால் ‘நான் 2 ஹிட் படங்கள் கொடுத்தால் மட்டுமே இந்த பட்ஜெட்டுக்கு தயாரிப்பாளர் கிடைப்பார். அதுவரை நீங்கள் வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் எடுங்கள்’ என தேசிங்கு பெரியசாமியிடம் சொல்லிவிட்டாராம் சிம்பு.
சிம்பு சொன்னது சரிதான் என்றாலும் ரஜினி, சிம்பு என இருவரையும் நம்பி 5 வருடங்களை வீணடித்துவிட்டார் தேசிங்கு பெரியசாமி. இப்போது வேறு ஒரு ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
