STR49 டேக் ஆப் ஆகுமா?.. வெற்றிமாறனுக்கு இருக்கும் நெருக்கடி.. சோலி முடின்ச்!….
STR49: சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. நடிப்பு, நடனம், இயக்கம் என பல திறமைகள் இருந்தும் அவரை சுற்றி எப்போதும் பிரச்சனை இருப்பதால் அவரின் எல்லா படங்களும் சிக்கல்களை சந்தித்து வருவது தொடர் கதையாக இருக்கிறது. சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகிறது என்றால் ஒன்று சிம்பு அந்த படத்திற்கு குடைச்சல் கொடுப்பார்.. அதாவது படப்பிடிப்பு சரியாக செல்ல மாட்டார் அல்லது சில நாட்கள் நடித்துவிட்டு பேசிய சம்பளத்தை விட அதிகமாக தயாரிப்பாளரிடம் கேட்பார். அல்லது பிரச்சனை வேறு வழிகளில் வரும்.
சிம்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் இல்லை. ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் இடையே நிறைய இடைவெளி விடுவார். சிம்பு இருக்கிறாரா இல்லையா என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த போது விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் கொடுத்தார். அதன்பின் அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு படம் அவருக்கு கை கொடுத்தது. அதன்பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைப் போன்ற படங்களில் நடித்தாலும் அந்த படங்களும் வெற்றி பெறவில்லை.
பார்க்கிங் பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அது தடை படவே வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துவங்கினார். ஷூட்டிங்கே போகாத சிம்புவும், பல நாட்கள் ஷூட்டிங் எடுக்கும் வெற்றி மாறனும் சேர்கிறார்களே என திரையுலகமே ஆச்சரியமாக பார்த்தது. வடசென்னை தொடர்பான கதை என சொல்லி படத்தை துவங்கினார்கள்.
சிம்புவை வைத்து சில நாட்கள் புரமோஷன் ஷூட் எல்லாம் எடுத்தார் வெற்றிமாறன். ஆனால் அந்த வீடியோ இதுவரை வெளியாகவில்லை. அதோடு சிம்புவும் வெற்றி மாறனும் அதிக சம்பளம் கேட்டதால் படம் டிராப் ஆகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஒரு பக்கம் டிராப் இல்லை விரைவில் சூட்டிங் துவங்கும் என்றும் சிலர் சொன்னார்கள்.
வெற்றிமாறன் படத்திற்கு சிம்பு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை அதாவது மூன்று மாதங்கள் கால்சீட் கொடுத்திருந்தார். ஏனெனில் நவம்பர் மாதம் அவரின் 50வது படமான அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்குகிறது. ஆனால் ஆகஸ்ட் துவங்கி 12 நாட்கள் ஆகியும் வெற்றிமாறன் படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை.
அநேகமாக இந்த மாதம் தொடங்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஒருவேளை அடுத்த மாதம் வெற்றிமாறன் துவங்கினால் இரண்டு மாதத்தில் ஷூட்டிங் முடிய வாய்ப்பே இல்லை. எனவே வெற்றிமாறனும், சிம்புவும் என்ன முடிவெடுக்க போகிறார்கள்? படம் டேக் ஆப் ஆகுமா? இல்லை டிராப் ஆகுமா? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது.
