ஸ்லிம் ஆவாரா இல்லை ஏஜிங் டெக்னாலஜியா?!.. புது படத்துக்காக 25 வயது வாலிபராக மாறும் சிம்பு!..

Simbu: சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. அப்பா டி.ராஜேந்தரால் சினிமாவை கற்றுக்கொண்டவர். சின்ன வயது முதல் நடித்து வருவதால் கேமராவை பார்த்து நடிக்கும் பயம் சிம்புவுக்கு இல்லாமல் போனது. அதோடு, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, கதை, திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு, இசை, இயக்கம் என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார்.

காதல் மற்றும் ஆக்சன் படங்களில் மாறி மாறி நடித்து வரும் நடிகர் இவர். சின்ன வயதிலேயே இவருக்கு லிட்டில் சூப்பர்ஸ்டார் என்கிற படத்தை கொடுத்தவர் அவரின் அப்பா டி.ஆர். எனவே, மற்றொரு ரஜினி போல ஆகவேண்டும் என்கிற ஆசை சிம்புவுக்கு எப்போதும் இருக்கிறது.

அதேநேரம், நன்றாக நடிக்கும் திறமையுள்ள நடிகரும் கூட. விண்ணை தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்காக குண்டான தனது உடலை உடற்பயிற்சி மூலம் குறைத்தார்.


அதன்பின் வெந்து தணிந்தது காடு படத்தில் அதை விட உடல் குறைத்து 20 வயது வாலிபன் போல மாறினார். இப்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மணிரத்னம் இயக்கி வருவதாலும், கமல் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில், மலையாளத்தில் 2018 என்கிற படத்தை இயக்கிய ஜூட் அந்தோணி ஜோசப் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதாம். அதேநேரம், இப்படத்திற்கு அதிக பட்ஜெட் ஆகும் என்பதால் தயாரிப்பாளரை தேடி வருகிறார் சிம்பு. இந்த கதையின் மீது இருக்கும் நம்பிக்கையில் 3 மாதங்கள் கால்ஷீட் கொடுக்கிறேன் என சொல்லி இருக்கிறாராம் சிம்பு.

அதோடு, தற்போது 41 வயதாகிவிட்ட சிம்பு இந்த படத்தில் 25 வயது வாலிபனாக வருகிறாராம். கோட் படத்தில் விஜயை இளமையாக காட்ட ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதுபோல சிம்புவை காட்டுவார்களா இல்லை சிம்பு உடலை குறைத்து 25 வயது வாலிபன் போல மாறுவாரா என்பதெல்லாம் இந்த படம் உருவாகும்போதுதான் தெரியவரும்.

Related Articles
Next Story
Share it