
Cinema News
STR49-ல் சிம்பு லுக் இதுவா?!… அரசன் சும்மா வேறலெவல்!.. வைரல் போட்டோ!…
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம் உண்டு. மன்மதன் படத்தை சிம்புதான் இயக்கினார் என சொல்வதும் உண்டு. நயன்தாராவை வைத்து வல்லவன் படத்தையும் சிம்பு இயக்கினார். சினிமாவை பற்றி பல விஷயங்களை தெரிந்துவைத்திருந்தாலும் சிம்பு மீது பல புகார்களும் உண்டு.
ஆனாலும், அவருக்கான ரசிகர்கள் இதுவரை குறையவில்லை. மற்ற நடிகர்களை போல சிம்பு தொடர்ந்து நடிப்பதும் இல்லை, ஹிட் படம் கொடுப்பதும் இல்லை என்றாலும் அவ்வப்போது அவருக்கொரு ஹிட் படம் அமைந்துவிடுகிறது. திடீரென மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதன்பின் வெளிவந்த படங்கள் ஓடவில்லை.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒரு படம் உருவாகி வருகிறது. வட சென்னை பகுதி தொடர்பான கதை இது. தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தின் கதைக்கு தொடர்புள்ள கதையாக இப்படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதியிருக்கிறார்.
இந்த படத்திற்கு அரசன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலைதான் இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. கையில் கத்தியோடு சிம்பு நிற்கும் படி போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம், சிம்புவின் தோற்றம் போஸ்டரில் மறைக்கப்பட்டிருக்கிறது.
எதற்காக அதை மறைத்தார்கள் என்பது தெரியவில்லை. அதேநேரம் இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்புகளில் வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், சிம்பு தொடர்பான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அரசன் படத்தில் அவரின் லுக் இதுதான் என சிலர் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிலரோ இது அசுரன் பட லுக் இல்லை. ஈஸ்வரன் படம் உருவானபோது எடுத்தது என்றும் சொல்லி வருகிறார்கள். எது உண்மை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஒருபக்கம், அரசன் படத்தின் புரமோ வீடியோவை வருகிற 16ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.